தமிழகத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பாராட்டு

தமிழகத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பாராட்டு

1 mins read
5e1377f1-0f41-4f95-bb33-c55e1509814e
-

விழுப்புரம்:

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பலவற்றிலும் தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கான 30 விழுக்காடு இடஒதுக்கீடு முழுமையாகக் கிடைப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் சாலாமேட்டிலுள்ள அரசு சட்டக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நீதிபதி சுந்தரேஷ், "சமுதாய மாற்றத்தை பொறுத்து நீதித்துறையில் வழக்கின் தன்மையும் மாறும் எனத் தெரிவித்தார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அரசுப் பணிகளில் 30 விழுக்காடு இடஒதுக்கீடு பெண்களுக்கு முழுமையாக கிடைப்பதாகவும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகவும் கூறினார்.