இரண்டாவது நாளாக மீனவர்களைக் கைது செய்த இலங்கை; மீனவ சமூகம் போராட்டம்

1 mins read
0226ef3d-3f25-49fb-b260-07fba2302e75
-

புதுக்­கோட்டை: எல்­லை­யைத் தாண்டி மீன் பிடித்­த­தா­கக் கூறி புதுக்­கோட்­டை­யைச் சேர்ந்த மேலும் 14 மீன­வர்­களை இலங்கை கடற்­படை­யி­னர் தொடர்ந்து இரண்­டா­வது நாளா­கக் கைது செய்­தி­ருப்­பது தமி­ழக மீன­வர்­க­ளி­டம் அச்­சத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

மீன­வர்­க­ளின் இரு பட­கு­க­ளை­யும் பறி­மு­தல் செய்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து, கடந்த 48 மணி நேரத்­தில் தமி­ழக மீன­வர்­கள் 69 பேரை இலங்கை கடற்­ப­டை­யி­னர் சிறை­பி­டித்­துள்­ளது மீன­வக் கிரா­மங்­களில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், மீன­வர்­க­ளை­யும் அவர்­க­ளது பட­கு­க­ளை­யும் விடு­விக்கக் கோரி, ராமேஸ்­வ­ரம் மீன­வர்­க­ளு­டன் புதுக்­கோட்டை மீன­வா்­களும் வேலை­நி­றுத்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

கச்­சத்­தீவு அருகே மீன் பிடித்­துக்­கொண்­டி­ருந்த ராமேஸ்­வ­ரம், மண்­ட­பம் பகு­தி­யைச் சேர்ந்த 55 மீன­வர்­க­ளை­யும் எட்டு விசைப் பட­கு­க­ளை­யும் இலங்கை கடற்­படை­யி­னர் நேற்று முன்­தி­னம் சிறை­பி­டித்­த­னர்.

இந்­நி­லை­யில், முதல்­வர் மு.க.ஸ்டா­லின், வெளி­யு­ற­வுத்­துறை அைமச்­சர் ஜெய்­சங்­க­ரி­டம் தொலைபேசியில் பேசியபோது, 55 மீன­வர்­க­ளை­யும் விடு­விக்க விரைந்து நட­வ­டிக்கை எடுக்கவேண்­டும் என கேட்­டுக்­கொண்­டார். ஜெய்­சங்­கரும் விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக உறுதி அளித்­தி­ருந்­தார்.