20 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத இருள் வாழ்க்கையில் இருந்து விடுவிக்க கோரிக்கை

20 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத இருள் வாழ்க்கையில் இருந்து விடுவிக்க கோரிக்கை

1 mins read
deb9ebc1-2733-4d2a-be4e-b17e8d808bf9
மின் இணைப்பு வழங்க நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்தி பாதிக்­கப்­பட்ட முனி­யப்­பன், அவ­ரின் மூன்று மகள்­கள் உள்­பட குடும்­பத்­தி­னர் அனை­வரும் மாவட்ட ஆட்­சி­யர் விசா­க­னி­டம் மனு அளித்­த­னர். படம்: ஊடகம் -

திண்­டுக்­கல்: அரசு வழங்­கிய தொகுப்பு வீட்­டில், கடந்த 20 ஆண்­டு­கா­ல­மாக மின்­சார வச­தி, குடிநீர் வசதி­யின்றி வாழ்ந்து வருகி­றோம். பள்ளி செல்­லும் குழந்­தை­கள் மின்­சா­ரம் இன்றி படிப்­ப­தற்கு பெரும் அவ­திப்­ப­டு­வ­தால் மின்­சார வச­தியை வழங்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்று திண்­டுக்­கல்­லில் வசிக்­கும் ஒரு குடும்­பத்­தி­னர் மாவட்ட ஆட்­சி­ய­ரி­டம் மனு அளித்­துள்­ள­னர்.

திண்­டுக்­கல் மாவட்­டம், கோட்ட நத்­தம் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் முனி­யப்­பன். கூலி வேலை செய்து வரு­கி­றார். இவ­ருக்கு காளீஸ்­வரி என்ற மனை­வி­யும் மூன்று குழந்­தை­களும் உள்­ள­னர்.

இவர்­க­ளுக்கு கடந்த 20 வரு­டங்­க­ளுக்கு முன்பு அர­சின் சார்­பில் வழங்­கப்­பட்ட வீட்டில் மின்சார வசதி இல்லாததால், பிள்ளைகள் இரு­ளில் கல்வி கற்­கும் அவ­லம் குறித்து முனி­யப்­பன் பல­முறை மாவட்ட ஆட்­சி­யர், மின்­வா­ரிய அலு­வ­ல­கத்­தில் புகார் அளித்­தும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை.

அவர்­க­ளது மூன்று குழந்­தை­களும் மண்­ணெண்­ணெய் விளக்­கின் மூலம் வீட்­டில் பாடம் படித்து வரு­கின்­ற­னர். இவர்களது மூத்த மகள் இந்­தி­ராணி பன்­னி­ரண்­டாம் வகுப்பு படித்து வரு­கி­றார். இவர் பத்­தாம் வகுப்­பில் அதிக மதிப்­பெண் எடுத்­த­வர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.