சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளராக இருந்த கோ. சண்முகநாதன் காலமானார்.அவருக்கு வயது 80.
உடல்நலமின்றி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன் நேற்று மாலை உயிரிழந்தார்.
1967ஆம் ஆண்டு முதல் கருணாநிதியின் கடைசிக்காலம் வரை 50 ஆண்டுகளுக்கும் மேல் உதவியாளராக இருந்தவர்.
கருணாநிதி எழுதிய 'நெஞ்சுக்கு நீதி' போன்ற புத்தகங்களை எழுத்துபூர்வமாக கொண்டுவந்ததில் முக்கிய பங்காற்றியவர்.
ஒருமுறை கருணாநிதி பேசியபோது, "சண்முகநாதன் என் அலுவலகத்தில் வேலைபார்ப்பவர் என்பதைவிட, என் அகத்தில் இருந்து பணியாற்றுபவர். சம்பளத்துக்காக வந்தவர் அல்ல. இந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் அளவுக்கு என்னோடு கலந்துவிட்டவர்," என உருக்கமாகக் கூறியிருந்தார்.
சண்முகநாதனின் மரணம் திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை திரும்பியவுடன் அஞ்சலி செலுத்த உள்ளதாகத் தகவல்.

