ஒன்பது மில்லியன் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை

ஒன்பது மில்லியன் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை

1 mins read
c58ddcaa-53b3-4afd-a365-3748e1593c68
-

சென்னை: தமி­ழ­கத்­தில் இன்­னும் ஒன்­பது மில்­லி­யன் பேர் கொரோனா தடுப்­பூசி போட்­டுக்கொள்­ள­வில்லை எனத் தெரிய வந்­துள்­ளது. இதை­யடுத்து, கட்­டுப்­பா­டு­க­ளைக் கடுமை­யாக்க வேண்­டும் என மருத்­துவ நிபு­ணர்­கள் தமி­ழக அர­சுக்கு ஆலோ­சனை வழங்கி இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கொரோனா கிரு­மித்தொற்­றில் இருந்து தப்­பிக்க இரண்டு தடுப்­பூசி­கள் போட்­டுக்­கொள்ள வேண்­டும் என மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது. இதை­ய­டுத்து, தமி­ழத்­தில் பல்­வேறு கட்­டங்­களில் தடுப்­பூசி முகாம்­கள் நடத்­தப்­பட்டு, லட்­சக்­கணக்­கா­னோர் இரண்டு தடுப்­பூசி­கள் போட்­டுக்கொண்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், மாநி­லத்­தில் 8.7 மில்­லி­யன் பேர் இரண்­டா­வது தடுப்­பூ­சி­கள் போட்­டுக்கொள்­ளா­மல் காலம் தாழ்த்தி வரு­வது அண்­மை­யில் தெரிய வந்­தது.

இதை­ய­டுத்து, வீடு தேடிச் சென்று தடுப்­பூசி போடும் நட­வடிக்கை செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது. இதற்­கி­டையே, தமி­ழகத்­தில் ஒன்­பது மில்­லி­யன் பேர் இன்­னும் முதல் தடுப்­பூ­சியே போட்­டுக் கொள்­ள­வில்லை என சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் கூறியதாக ஊட­கச் செய்தி தெரிவிக்கிறது.