வருமான வரி ஏய்ப்பு: தனியார் நிறுவனம், நடிகர் விஜய்யின் உறவினர் வீட்டில் சோதனை

வருமான வரி ஏய்ப்பு: தனியார் நிறுவனம், நடிகர் விஜய்யின் உறவினர் வீட்டில் சோதனை

2 mins read
beb84cad-7579-4274-92c0-c27b1dd49407
-

சென்னை: முன்­னணி கைபேசி உதி­ரிப் பாகத் தயா­ரிப்பு நிறு­வ­னம் வரு­மான வரி செலுத்­து­வ­தில் முறை­கேடு செய்­துள்­ள­தாக புகார் எழுந்­துள்­ளது. இதை­ய­டுத்து, சென்­னை­யின் புற­ந­கர்ப் பகு­தி­யில் உள்ள அந்­நி­று­வ­னத்­தின் தலைமை அலு­வ­ல­கத்­தி­லும் நாடு முழு­வ­தும் உள்ள சீன கைபேசி நிறு­வ­னங்­க­ளி­லும் நேற்று வரு­மான வரி சோதனை நடத்­தப்­பட்­டது.

சீன நிறு­வ­னங்­கள் தயா­ரிக்­கும் கைபே­சி­க­ளின் உதி­ரிப் பாகங்­களை ஏற்­று­மதி செய்­வ­தில் முறை­கேடு நடந்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, திரைப்­பட நடி­கர் விஜய்­யின் உற­வி­ன­ரும் திரைப்­ப­டத் தயா­ரிப்­பா­ள­ரு­மான பிரிட்டோ வீட்­டி­லும் வரு­மா­ன­வ­ரித்­து­றை­யி­னர் மேற்­கொண்ட அதி­ரடி சோதனை நட­வ­டிக்கை சென்­னை­யில் பர­பரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

வரி முறை­கேட்­டில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­படும் உதிரி பாகத் தயா­ரிப்பு நிறு­வ­னத்­து­டன் தொடர்­புள்ள மேலும் பல்­வேறு இடங்­களில் சோதனை நடத்­தப்­பட்­ட­தா­க­வும் அவற்­றுள் பிரிட்­டோ­வின் வீடும் ஒன்று என்­றும் தெரிய வந்­துள்­ளது. விஜய் நடிப்­பில் வெளி­யான 'மாஸ்­டர்' படத்தை தயா­ரித்­த­வர் பிரிட்டோ.

தனி­யார் உதிரி பாகத் தயா­ரிப்பு நிறு­வ­னத்­தின் கிளை அலு­வ­ல­கங்­கள் டெல்லி, மும்பை உட்­பட பல்­வேறு நக­ரங்­களில் செயல்­பட்டு வரு­கின்­றன. அந்த இடங்­க­ளி­லும் அதி­கா­ரி­கள் ஒரே சம­யத்­தில் சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

அந்நிறுவனம் பல்வேறு முன்னணி கைபேசி நிறு­வ­னங்­க­ளுக்கு உதி­ரிப் பாகங்­களை உற்­பத்தி செய்து அவற்றை ஏற்­று­மதி செய்­கிறது. மேலும், இந்­திய சந்தை­யி­லும் அந்த உதி­ரிப் பாகங்­கள் விற்­கப்­ப­டு­கின்­றன.

இந்­நி­று­வ­னம் வரு­மான வரி செலுத்­த­வில்லை என புகார் எழுந்­துள்­ளது. இதே போல் சீனா­வில் தயா­ரா­கும் கைபே­சி­களை இறக்கு­மதி செய்­தது, அவற்­றுக்­கான உதிரிப் பாகங்­களை ஏற்­று­மதி செய்­த­தில் முறை­கேடு நடந்­திருப்­ப­தாக பிரிட்டோ நடத்தி வரும் நிறு­வ­னத்­தின் மீது குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது.

இதை­ய­டுத்து, சென்­னை­யில் உள்ள அவ­ரது வீடு, அலு­வ­ல­கங்­களில் வரு­மான வரி சோதனை நடந்­தது.

மேலும், சீன கைபேசி நிறு­வ­னங்­க­ளி­லும் நடை­பெற்ற சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது நூற்­றுக்­கும் மேற்­பட்ட வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள், ஊழி­யர்­கள், காவல்­து­றை­யி­னர் என எரா­ள­மா­னோர் பங்­கேற்­ற­னர். சோத­னை­யின்­போது பல்­வேறு முக்­கிய ஆவ­ணங்­க­ளைப் பறி­மு­தல் செய்­துள்­ள­தா­க­வும் சோதனை இன்­னும் முடி­ய­வில்லை என்­றும் குறிப்­பிட்ட அதி­கா­ரி­கள், இன்­றும் அந்­ந­ட­வ­டிக்கை நீடிக்­கும் எனத் தெரி­வித்­த­னர்.