தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் அருகே சில இடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தமிழக ஊடகங்களில் சற்றுமுன் செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.14 மணியளவில் ரிக்டர் அளவு 3.5 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூரிலிருந்து 50 கிலோமீட்டர் மேற்கு- வடமேற்கு பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


