கேரளாவில் பறவைக் காய்ச்சல்; தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் பறவைக் காய்ச்சல்; தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு

1 mins read
787d9151-dbf8-48b2-b1cd-11e9f8348971
-

கோவை: அண்டை மாநி­ல­மான கேர­ளா­வில் ஏற்­பட்ட பற­வைக் காய்ச்­சல் பாதிப்பு தமி­ழ­கத்­தி­லும் ஏற்­ப­டா­மல் தடுக்க தமி­ழக-கேரள எல்­லை­யான ஆனை­கட்­டி­யில் கால்­ந­டைத் துறை­யி­னர் தீவிர கண்­காணிப்­புப் பணி­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

கேர­ளா­வி­லி­ருந்து வரும் வாக­னங்­களை ஆனை­கட்டி பேருந்து நிறுத்­தத்­தில் தீவிர சோத­னைக்கு உட்­ப­டுத்­திய பிறகே தமி­ழ­கத்­திற்­குள் அனு­ம­திக்­கின்­ற­னர்.

"கேர­ளா­வில் நில­வும் பற­வைக் காய்ச்­ச­லை அடுத்து கோவை­யில் உள்ள 1,200க்கும் அதி­க­மான கோழிப்­பண்­ணை­களில் கண் காணிப்­பு தீவி­ரமாகியுள்­ளது.

"கோழிப் பண்­ணை­க­ளைச் சுத்­த­மாக வைத்­துக்­கொள்ள வேண்­டும். ஒருமுறை பறவைக் காய்ச்­சல் வந்­தால் அதன் பாதிப்பு ஆறு மாத காலத்துக்கு நீடிக்கும் என்பதால் தொடர்ந்து முன்­னெச்­ச­ரிக்­கை­யுடன் பண்­ணை­யா­ளர்­கள் இருக்கவேண்­டும்," என்று தமி­ழக கால்நடைத் துறை­யி­னர் அறி­வு­றுத்தி உள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் இது­வரை பற­வைக் காய்ச்­சல் பாதிப்பு கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என்­றும் கூறி­யுள்­ள­னர்.