தமிழகத்தில் மேலும் 33 பேர் ஓமிக்ரான் தொற்றால் பாதிப்பு இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழகம்; சென்னையில் மட்டும் 26 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 33 பேர் ஓமிக்ரான் தொற்றால் பாதிப்பு இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழகம்; சென்னையில் மட்டும் 26 பேருக்கு பாதிப்பு

2 mins read
85f437d5-88fc-40a1-88de-246a9245d426
-

சென்னை: தமிழ்­நாட்­டில் மேலும் 33 பேருக்கு ஓமிக்­ரான் பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக மருத்­துவ, மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தி­யா­வில் தலை­ந­கர் டெல்லி, மகா­ராஷ்­டி­ரா­விற்கு அடுத்­த­ப­டி­யாக ஓமிக்­ரான் பாதிப்­பில் மூன்­றா­வது இடத்­தில் தமி­ழ­கம் உள்­ள­தாக மத்­திய சுகா­தா­ரத்­துறை குறிப்­பிட்டு உள்­ள­தா­க­வும் அமைச்­சர் மேலும் கூறி­னார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர் களி­டம் பேசிய அவர், "ஏற்­கெ­னவே நைஜீ­ரி­யா­வில் இருந்து தோஹா வழி­யாக சென்­னைக்கு வந்த ஒரு வருக்­கும் அவ­ரு­டன் தொடர்­பில் இருந்த 33 பேருக்­கும் பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தால் மொத்த பாதிப்பு 34ஆக அதி­க­ரித்து உள்­ளது.

"எனி­னும், தமி­ழ­கத்­தில் முதல்­மு­றை­யாக ஓமிக்­ரா­னால் பாதிக்­கப்­பட்­ட­வர் முழுமையாகக் குண­மடைந்து வீடு திரும்பியுள்ளார்.

"மற்ற 33 பேரில் அதி­க­பட்­ச­மாக சென்­னை­யில் 26 பேருக்­கும் மதுரை­யில் நால்­வ­ருக்­கும் திருவண்­ணா­மலை­யில் இரு­வ­ருக்­கும் மதுரை, சேலத்­தில் தலா ஒருவருக்­கும் என இந்த ஓமிக்­ரான் தொற்று உறுதியாகி உள்ளது.

"இவர்­களில் 18 வய­துக்­குட்­பட்ட இரு­வ­ரைத் தவிர மற்ற அனை­வ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டு உள்ளனர்.

"இவர்­கள் அனை­வ­ருக்­கும் லேசான அறி­கு­றி­கள் மட்­டுமே உள்­ளன. தலைசுற்­றல், தொண்டை கர­க­ரப்பு மட்­டுமே இருந்­தது. விரை­வில் அவர்­களும் குண­மடைந்து வீடு திரும்­பு­வார்­கள்," என்றும் அவர் நம்பிக்கைத் தெரி­வித்­தார்.

கொரோ­னாவைவிட வேக­மாக பர­வும் இந்­தக் கிரு­மி­யைக் கட்­டுப் படுத்த தேவை­யான அனைத்து நடவடிக்­கை­களும் எடுக்­கப்­பட்டு வரும் நிலை­யில், "கொரோ­னாவை எதிர்த்­துப் போரா­டி­ய­து­போல் ஓமிக்­ரா­னை­யும் எதிர்த்துப் போரா­டியே தீர­வேண்­டும்.

"இந்நேரத்­தில் மக்­க­ளுக்கு இருக்­கும் ஒரே பாது­காப்­புக் கவ­சம் தடுப்­பூசி மட்­டும்­தான்.

"தமி­ழ­கத்­தில் மீண்­டும் ஊர டங்கு வராது. மக்­கள் கட்­டுப்­பாட்டு டன் நடந்­து­கொண்­டால் ஓமிக்ரா னையும் கட்­டுப்­ப­டுத்திவிட­லாம்," என்றும் அமைச்சர் சொன்னார்.

இதற்­கி­டையே, கிறிஸ்­து­மஸ், புத்­தாண்டு பண்­டி­கை­கள் அடுத்­தடுத்து வர­வுள்ள நிலை­யில், கொரோனா பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்­சி­யர்­க­ளு­ட­னும் தலை­மைச் செய­லா­ளர் வெ.இறையன்பு ேநற்று ஆலோ­சனை நடத்­தி­னார்.

இதேேபால், இன்று முதல்­வர் ஓமிக்­ரான் பாதிப்பு குறித்து ஆலோ­சனை நடத்த உள்­ள­தாக தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.