முன்னாள் அமைச்சருக்கு எதிராக நோட்டீஸ்

முன்னாள் அமைச்சருக்கு எதிராக நோட்டீஸ்

1 mins read
d388e518-4f70-4e33-b6c5-8dfa2f5e5498
-

சென்னை: மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எட்டு தனிப்படை கள் அமைக்கப்பட்டு பெங்களூரு, சென்னை, கேரளா போன்ற பல்லேறு பகுதிகளிலும் அவரைத் தேடி வருகின்றனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவருக்குத் தொடர்புடைய அனைவரும் கண்காணிக் கப்பட்டு வருகின்றனர்.