செய்திக்கொத்து

தலைமை ஆசிரியை இடைநீக்கம்

வேலுார்: வேலூர் மாவட்டம், மேல்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ரேவதி, 50. இவர், பள்ளிக்குத் தாமதமாக வரும் மாணவர்களையும் நன்றாகப் படிக்காத மாணவியரையும் ஆபாசமாகத் திட்டி வருவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆபாசமாகத் திட்டுவது உறுதியானதைத் தொடர்ந்து, ரேவதியை பணி இடைநீக்கம் செய்து, மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் உத்தரவிட்டார்.

தம்பதியர் மீது மோசடி புகார்

குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்தவர் வேலுமணி, 49, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.6.50 லட்சம் பெற்று ஏமாற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது. சந்திரசேகர் தனது பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, வேலுமணியும் அவரது மனைவி தமிழ்ச்செல்வியும் சந்திரசேகரை மிரட்டி உள்ளனர். இதையடுத்து, சந்திரசேகர் அளித்த புகாரின்படி, தம்பதியிடம் குளித்தலை காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

கரும்பு வயலில் பிடிபட்ட மலைப்பாம்பு

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே ரெட்டிமாங்குப்பம் கிராமத்தில் கரும்புத் தோட்டத்தில் கரும்பு அறுவடை செய்துகொண்டிருந்தனர். அப்போது, அங்கு நெளிந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மீட்ட ஆம்பூர் தீயணைப்புத் துறையினர், அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அதனை விட்டனர். படம்: ஊடகம்

குற்றவாளிகளைக் கைது செய்யும்படி கிராம மக்கள் சாலை மறியல்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை அடுத்த பாச்சலூர் கிராமத்தில் 5ஆம் வகுப்பு மாணவி ஒருவர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி நூற்றுக்கணக்காேனார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவம் நடைபெற்று எட்டு நாட்கள் ஆகியும் இதுவரை யாரும் கைதுசெய்யப்படாமல் உள்ளதைக் கண்டித்து, திண்டுக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் சிறுமியின் பெற்றோரும் மேல்மலை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்காேனாரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்டோவில் அதிக அளவில் பயணிகளை ஏற்றினால் பறிமுதல்

மதுரை: மதுரையில் அதிகளவு பயணிகளை ஏற்றிச் செல்லும் 'ஷேர் ஆட்டோக்கள்' பறிமுதல் செய்யப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் எச்சரித்துள்ளார். ஷேர் ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வது, விதிகளுக்கு மாறாக வாகனங்களை மாற்றி இயக்குவது தெரியவந்தால் ஆட்டோக்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!