ஆசிரியர்கள் இன்றி சொந்தமாக கல்வி கற்கும் மாணவர்கள்

ஆசிரியர்கள் இன்றி சொந்தமாக கல்வி கற்கும் மாணவர்கள்

1 mins read
b0eef029-c0a9-432a-a144-910c58e5a146
ஆசி­ரி­யர்­கள் வராமல் இருப்பதால் மாண­வர்­கள் பள்­ளிக்கு வரு­வதை நிறுத்தி விட­வில்லை. தாங்களாகவே முடிந்தளவு கற்றுக்கொள் கின்றனர். படம்: ஊடகம் -

நரிக்­குடி: விரு­து­ந­கர் மாவட்­டத்­தில் உள்­ளது நரிக்­குடி பூம்­பிடாகை ஊராட்சி ஒன்­றியத் தொடக்­கப் பள்ளி. முப்­ப­துக்­கும் மேலான மாண­வர்­கள் படித்து வரும் இந்­தப் பள்­ளிக்கு கடந்த ஐந்து மாதங்­க­ளா­கவே ஆசி­ரி­யர்­கள் யாரும் பாடம் போதிக்க வருவதில்லை என்று கூறப்படுகிறது.

இத­னால், மாண­வர்­கள் தாங்­க­ளா­கவே சொந்­த­மாக கல்வி கற்­கும் அவல நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இப்­பள்­ளித் தலைமை ஆசி­ரி­யர் இரு ஆண்­டு­க­ளுக்கு முன்பு கால­மா­னார். உதவி ஆசி­ரி­யர் களும் பள்­ளிக்கு வருவதில்லை. ­ இதற்காக, மாணவர்கள் தங்க ளது பள்ளிக்கூட வருகையை நிறுத்திவிடவில்லை.

இதையறிந்த கிரா­மத்து பட்­ட­தாரி இளை­ஞர்­கள் சிலர், அவ்­வப்­போது வந்து மாணவர்களுக்குப் பாடம்­ ந­டத்தி ஊக்கப்­ப­டுத்தி வரு­கின்­ற­னர். மதிய உணவும் வழங்­கப்­படு­கிறது.

இந்த இளை­ஞர்­களும் வராத நேரங்­களில் மாண­வர்­கள் தாங்­க­ளா­கவே பாடங்­களை முடிந்தள வில் கற்­றுக்கொள்கின்றனர்.

சில மாண­வர்­கள் பள்­ளிக்கு வரா­மல் ஆடு மாடுகளை மேய்த்தும் வீட்டு வேலை­களைச் செய்­தும் தங்களது எதிர்­காலத்தை பாழாக்கி வரு­கின்­ற­னர்.

இப்பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இங்குள்ள மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நரிக்­குடி வட்­டார கல்வி அலு­வ­லர் சிவக்­கு­மார் கூறுகையில், "சுழற்சி முறை­யில் நான்கு ஆசி­ரி­யர்­க­ளை­ நிய­மித்­தோம். மாவட்­டத்­தின் கடைக்­கோ­டி­யில் இருப்­ப­தால் போக்­கு­வ­ரத்தை கார­ணம் காட்டி அவர்­களும் பணிக்கு வர­விரும்பவில்லை," என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.