திருநெல்வேலி: நெல்லையில் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிவறைச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் இம்மாதம் 17ஆம் தேதி அன்று உயிரிழந்ததை அடுத்து, கைது செய்யப்பட்ட மூவருக்கும் பிணை வழங்கி திருநெல்வேலி மாவட்ட நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.
பள்ளியின் தலைமை ஆசிரியை ஞானசெல்வி, பள்ளித் தாளாளர் சாமுவேல் செல்வகுமார், கட்டட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகிய மூவரும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்களிலும் திருநெல்வேலி நடுவர் நீதிமன்றத்துக்கு மாலை 5 மணி அளவில் வந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை யுடன் உத்தரவிடப்பட்டுள்ளது.

