மூன்று பேர் குணமடைந்து இல்லம் திரும்பினர்; 10%க்கு மேல் கிருமி பாதிப்பு இருந்தால் கட்டுப்பாடுகள் விதிப்பு ஓமிக்ரான் பரவல்: முதல்வர் ஆலோசனை

மூன்று பேர் குணமடைந்து இல்லம் திரும்பினர்; 10%க்கு மேல் கிருமி பாதிப்பு இருந்தால் கட்டுப்பாடுகள் விதிப்பு ஓமிக்ரான் பரவல்: முதல்வர் ஆலோசனை

4 mins read
f06b2cdc-9e34-4976-8cca-a7675c1f94d3
-

சென்னை: தமி­ழ­கத்­தில் உரு­மா­றிய ஓமிக்­ரான் தடுப்பு, முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் குறித்து அமைச்­சர்­கள், அதி­கா­ரி­கள், மருத்­துவ நிபு­ணர்­க­ளு­டன் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் சென்னை தலை­மைச் செய­ல­கத்­தில் நேற்று ஆலோ­சனை நடத்­தி­னார்.

இந்­தி­யா­வில் தலை­ந­கர் டெல்லி, மகா­ராஷ்­டி­ரா­விற்கு அடுத்­த­ப­டி­யாக ஓமிக்­ரான் பாதிப்­பில் மூன்­றா­வது இடத்­தில் தமி­ழ­கம் உள்­ள­தாக மத்­திய சுகா­தா­ரத்­துறை குறிப்­பிட்டு உள்­ளது.

இந்த சூழ­லில், தேவைப்­பட்­டால் இரவு நேர ஊர­டங்­கு­களை அமல்­படுத்­த­லாம். அல்­லது மாவட்­டங்­களில் கூடு­தல் கட்­டுப்­பா­டு­களை விதிக்­க­லாம் என மத்­திய அரசு மாநி­லங்­க­ளுக்கு அறி­வு­றுத்தி உள்­ளது.

இப்­போது, தமி­ழ­கத்­தில் ஓமிக்­ரான் கிரு­மிப்­ப­ர­வ­லால் 31 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். இந்த எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­க­லாம் என்ற அச்­ச­மும் உள்ளது.

இந்­நி­லை­யில், ஓமிக்­ரான் கிரு­மிப்பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த எந்­த­வி­த­மான புதிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­லாம்? புதிய கட்­டுப்­பா­டு­களை விதிக்­க­லாமா? வேண்­டாமா? இரவு நேர ஊர­டங்கு, நள்­ளி­ரவு புத்­தாண்டு கொண்­டாட்­டங் களுக்கு தடை விதிப்­பது, அர­சி­யல், சமு­தாய நிகழ்­வு­க­ளுக்கு கட்­டுப்­பாடுகள் விதிப்­பது உள்­ளிட்­டவை குறித்து ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் விவா­திக்­கப்­பட்டு வரு­வ­தா­கத் தெரி­கிறது.

மருத்­துவ வல்­லு­நர்­க­ளு­ட­னான ஆலோ­ச­னைக்­குப் பிறகே இது தொடர்­பாக முடி­வெ­டுக்கப்­படும் என்று சுகா­தா­ரத் துறை தரப்­பி­லும் கூறப்­பட்­டுள்­ளது.

சென்­னை­யில் மட்­டும் ஓமிக்­ரான் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 27ஆக அதி­க­ரித்­துள்­ள­தால் மக்­க­ளி­டையே அச்சுறுத்­தல் இருந்து வரு­கிறது.

டெல்டா கிரு­மி­யை­விட ஓமிக்­ரான் கிருமி வேக­மா­கப் பர­வக்­கூடி­யது என்­ப­தால் இந்­தக் கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு மாநில அர­சு­க­ளுக்கு மத்­திய அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து, ஓமிக்­ரான் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள மதுரை, சென்னை, சேலம், திரு­வண்­ணா­மலை ஆகிய மாவட்­டங்­களில் மட்­டும் இரவு நேர ஊர­டங்கை விதிக்­க­லாமா என்­பது குறித்து ஆலோ­சனை நடத்­தப்­பட்டு வரு­வ­தா­க­வும் விரை­வில் அந்­தந்த மாவட்ட ஆட்­சி­யர்­கள் இது­கு­றித்து அறி­விக்­க­லாம் என்­றும் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

இந்­நி­லை­யில், 10%க்கும் மேல் ஓமிக்­ரான் பாதிப்பு இருந்­தால் இரவு நேர ஊர­டங்கு கட்­டுப்­பா­டு­கள் விதிக்­க­லாம் என மாநி­லங்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் 10%க்கும் குறை வாகவே ஓமிக்­ரான் பாதிப்பு உள்­ள­தால் இரவு நேர ஊர­டங்கு தேவை­யில்லை என­வும் தக­வல்­கள் குறிப்பிட்டுள்ளன.

31ஆக குறைந்த பாதிப்பு

இத­னி­டையே, "தொற்­றில் இருந்து மூன்று பேர் குணம் அைடந்­துள்­ளதை அடுத்து, மொத்த பாதிப்பு 34ல் இருந்து 31க்கு குறைந்­துள்­ளது. நைஜீ­ரி­யா­வில் இருந்து வந்­த­வர், அவ­ரது சகோ­தரி, சகோ­தரி மகள் ஆகி­யோர் ஓமிக்­ரான் பாதிப்­பில் இருந்து குண­ம­டைந்து வீடு திரும்­பி­னர். மூவ­ரும் குணம் அைடந்­த­தில் மகிழ்ச்சி. அவர்­களை நலம் விசா­ரித்­த­போது, லேசான பாதிப்பு இருப்­ப­தா­கக் கூறி­னர். இவர்­கள் ஏழு நாட்­கள் வீட்­டில் தனி­மைப் படுத்­திக்­கொள்ள அறி­வு­றுத்­தப்­பட்டு உள்­ளது," என்று மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

சென்னை: தமி­ழ­கத்­தில் உரு­மா­றிய ஓமிக்­ரான் தடுப்பு, முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் குறித்து அமைச்­சர்­கள், அதி­கா­ரி­கள், மருத்­துவ நிபு­ணர்­க­ளு­டன் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் சென்னை தலை­மைச் செய­ல­கத்­தில் நேற்று ஆலோ­சனை நடத்­தி­னார்.

இந்­தி­யா­வில் தலை­ந­கர் டெல்லி, மகா­ராஷ்­டி­ரா­விற்கு அடுத்­த­ப­டி­யாக ஓமிக்­ரான் பாதிப்­பில் மூன்­றா­வது இடத்­தில் தமி­ழ­கம் உள்­ள­தாக மத்­திய சுகா­தா­ரத்­துறை குறிப்­பிட்டு உள்­ளது.

இந்த சூழ­லில், தேவைப்­பட்­டால் இரவு நேர ஊர­டங்­கு­களை அமல்­படுத்­த­லாம். அல்­லது மாவட்­டங்­களில் கூடு­தல் கட்­டுப்­பா­டு­களை விதிக்கலாம் என மத்­திய அரசு மாநி­லங்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

இப்­போது, தமி­ழ­கத்­தில் ஓமிக்­ரான் கிரு­மிப்­ப­ர­வ­லால் 31 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இந்த எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கலாம் என்ற அச்­சம் நிலவி வருகிறது.

இந்­நி­லை­யில், ஓமிக்­ரான் கிரு­மிப் பர­வலைக் கட்­டுப்­ப­டுத்த எந்தவிதமான புதிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­லாம்? புதிய கட்­டுப்­பா­டு­களை விதிக்­க­லாமா? வேண்டாமா? இரவு நேர ஊரடங்கு, நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங் களுக்கு தடை விதிப்பது, அரசியல் சமுதாய நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது உள்ளிட்டவை குறித்து கூட்­டத்­தில் ஆலோ­சிக்­கப்­படும் என்று தெரி­கிறது.

இதன்படி, புதிய முக்­கிய அறி­விப்­பு­கள் வெளி­யி­டப்­ப­ட­லாம் என தகவல்கள் தெரிவித்துள்ளன.

சென்­னை­யில் மட்­டும் ஓமிக்­ரான் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 27ஆக அதி­க­ரித்­துள்­ள­தால் மக்­க­ளி­டையே அச்­சம் நிலவி வரு­கிறது.

இந்­நி­லை­யில், 10 விழுக்­காட்­டுக்கும் மேல் கொரோனா பாதிப்பு இருந்­தால் கட்­டுப்­பா­டு­கள் விதிக்க மாநி­லங்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

தடுப்பு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­த­போ­தி­லும் தொடர்ந்து தடுப்­பூசி செலுத்­து­வது, முகக்­க­வ­சம் அணி­வது போன்ற முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களைத் தொடர்ந்து கடைப்­பி­டிக்க வேண்­டும் என மக்­கள் நல்­வாழ்­வுத் துறை செய­லா­ளர் ராதா­கி­ருஷ்­ணன் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

டெல்டா கிரு­மி­யை­விட ஓமிக்­ரான் கிருமி வேக­மா­கப் பர­வக்­கூடி­யது என்­ப­தால் இந்­தக் கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு மாநில அர­சு­க­ளுக்கு மத்­திய அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

எனவே, மதுரை, சென்னை, சேலம், திரு­வண்­ணா­மலை மாவட்­டங்­களில் மட்­டும் இர­வு­நேர ஊர­டங்கு கட்­டுப்­பாடு விதிக்­கப்­ப­ட­லாம் என்று அரசு தரப்­பில் ஆலோ­சனை நடத்தி வரு­வ­தா­க­வும் விரை­வில் அந்­தந்த மாவட்ட ஆட்­சி­யா­ளர்­கள் இது­கு­றித்து அறி­விக்­க­வுள்­ளார்­கள் என்­றும் தக­வல்கள் கூறியுள்ளன.

31ஆக குறைந்த பாதிப்பு

இத­னி­டையே, தொற்றில் இருந்து மூன்று பேர் குணம் அைடந்துள்ளதை அடுத்து, மொத்த பாதிப்பு 34ல் இருந்து 31க்கு குறைந்துள்ளது. நைஜீரியாவில் இருந்து வந்தவர், அவரது சகோதரி, சகோதரி மகள் ஆகியோர் ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மூவரும் குணம் அைடந்ததில் மகிழ்ச்சி. அவர்களை நலம் விசாரித்தேன், லேசான பாதிப்பு இருப்பதாகக் கூறினர். இவர்கள் ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப் படுத்திக்கொள்ள அறி வுறுத்தப்பட்டு உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.