வேளாங்கண்ணி: நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உலகப்புகழ் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ஜொலித்து வரும் பேராலயத்தில் நேற்று நள்ளிரவு சிறப்புத் திருப்பலியும் நடந்தது.
அன்னை மாதா பேராலயத்தில் உள்ள விண்மீன் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் குடிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்துக்குச் செல்லும் வழி எங்கும் 400 அடி நீளம், 60 அடி அகலத்துக்கு மின் விளக்குகளால் அலங்காரப் பந்தல் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேராலய அதிபர் இருதயராஜ் கூறுகையில், "பேராலயத்துக்கு வரும் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். திறந்தவெளி அரங்கமான புனித சேவியர் திடலில் சிறப்பு வழிபாடுகளை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன," என்றார்.

