தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தினமும் ரசம்; மனைவி கொலை; கணவருக்கு ஆயுள் தண்டனை

1 mins read
ce7c1dbf-cc5e-47b9-9e47-ffcf34b1edcc
-

மதுரை: தினந்­தோ­றும் வாய்க்கு ருசி­யாக சமைத்­துப் போடா­மல் ரசம் வைத்து சாப்­பாடு போட்ட மனை­வி­யிடம் மல்­லு­கட்­டிய கண­வர், கடை­சி­யில் அவரை ஆத்­தி­ரத்­து­டன் உருட்­டுக் கட்­டை­யால் தாக்கியதில் மனைவி உயி­ரி­ழந்­தார்.

கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக நடந்து வந்த இந்த வழக்­கின் ெதாடர்­பில், குற்­றம் நிரு­பிக்­கப்­பட்­ட­தா­கக் கூறி கண­வ­ருக்கு ஆயுள் தண்­டனையுடன் ரூ.5,000 அப­ரா­தம் விதித்து மதுரை மாவட்ட நீதி­பதி பாலகுமார் உத்­த­ரவிட்டார்.

அத்துடன், தாயை இழந்து தவிக்­கும் இரு குழந்­தை­க­ளுக்­கும் அரசு சார்­பில் நிவா­ர­ணம் வழங்­க­வும் பரிந்­துரை செய்­தார்.

மதுரை மாவட்டம், கீரைத்­துறை பகு­தியைச் சேர்ந்­த­வர்­கள் கண்­ணன்-சிவ­ஞா­ன­செல்வி தம்­ப­தி­யர். இவர்­க­ளுக்கு இரு குழந்­தை­கள் உள்­ள­னர்.

ஆட்டோ ஓட்டுநரான கண்­ணன் தின­சரி மது அருந்­தி­விட்டு, தனது மனை­வி­யு­டன் தக­ரா­றில் ஈடு­பட்டு வந்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், கடந்த 2016ல் சம்பவம் நடந்தபோது, ஆட்டோ சவா­ரிக்கு சென்­று­விட்டு மதிய உண­விற்கு வீட்டுக்கு வந்­துள்­ளார் கண்­ணன்.

அப்­போது, மனைவி ரசம் சாதத்தை வைக்க, "தின­மும் ரசம் சோறுதான் சாப்பாடா?" என்று கேட்டு சிவ­ஞா­ன­செல்­வி­யு­டன் கண்­ணன் வாக்­கு­வா­தம் செய்­துள்­ளார். வாக்­கு­வா­தம் முற்­றி­ய­தில், ஆத்­தி­ர­ம­டைந்த கண்­ணன் அரு­கில் இருந்த கட்­டையை எடுத்து தனது மனை­வி­யின் தலை­யில் தாக்­கி­ய­தில் உயி­ரி­ழந்­தார்.