விமான நிலைய விரிவாக்கத்திற்கு நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு

விமான நிலைய விரிவாக்கத்திற்கு நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு

2 mins read
431a9cec-fa2c-4305-b45f-5f0670b356f8
-

கோவை: கோவை அனைத்­து­லக விமா­ன­ நி­லைய விரி­வாக்க பணிக்­காக கடந்த மூன்று மாதங்­களில் நில உரி­மை­யா­ளர்­க­ளுக்கு 868 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

கோவை அனைத்­து­லக விமா­ன­நி­லை­யத்தை மேம்­ப­டுத்­தும் பணி­கள் கடந்த பத்­தாண்­டு­க­ளாக மந்த கதி­யில் நடந்து வந்த நிலை­யில், விரி­வாக்க பணி­க­ளுக்­காக நிலங் களைக் கைய­கப்­ப­டுத்­தும் பணியை மாவட்ட நிர்­வா­கம் துவங்­கி­யது.

விமா­ன­நி­லை­யம், 420 ஏக்­கர் பரப்­ப­ள­வில் அமைந்­துள்­ளது. இதில், 9,500 அடி நீள ஓடு­த­ளம் உள்­ளது. இத­னு­டன் கூடு­த­லாக, 644 ஏக்­கர் பரப்­ப­ளவை இணைத்து, 12,500 அடி நீள ஓடு­தள பாதை மற்­றும் கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்த முடிவு செய்­யப்­பட்­டது.

இதற்­கான நிலங்­கள் சிங்­கா­

நல்­லுார், உப்­பி­லி­பா­ளை­யம், காளப்­பட்டி, இரு­கூர், நீலாம்­பூர் ஆகிய கிரா­மங்­களில் அமைந்­துள்­ளன. இதில் 30 ஏக்­கர் அர­சுக்கு சொந்­த­மான புறம்­போக்கு நில­மா­கும்.

152 ஏக்­கர் இந்­திய பாது­காப்புத் துறைக்கு சொந்­த­மா­னது. மீத­முள்ள, 462 ஏக்­கர் நிலம் பொது­மக்­க­ளி­டம் இருந்து கைய­கப்­ப­டுத்த வேண்­டிய பட்டா நில­மா­கும்.

இவற்­றில் நில உரி­மை­யா­ளர்­கள் மொத்­தம் 3,075 பேர் உள்­ள­னர். இச்­சூ­ழ­லில் நில இழப்­பீட்டுத் தொகை­யாக, 1,132 கோடி ரூபாயை கடந்த செப்­டம்­பர் மாதம் தமி­ழக அரசு ஒதுக்­கி­யது.

இதை­ய­டுத்து நிலம் கைய­கப்­

ப­டுத்­தும் பணி தீவி­ர­ம­டைந்­துள்­ளது. இது­வரை, 1,054 உரி­மை­யா­ளர்­க­ளி­டம் இருந்து, 195 ஏக்­கர் நிலம் கைய­கப்­ப­டுத்­தப்­பட்டு, 868 கோடி ரூபாய் இழப்­பீடு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்து, வரு­வாய்­துறை அதி­கா­ரி­கள் கூறி­ய­போது, "நில உரி­மை­யா­ளர்­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்தி, சுமூக தீர்வு காணப்­பட்­டுள்­ளது.

"நிலத்தை உரி­மை­யா­ளர்­கள் கொடுக்க சம்­ம­தித்­த­வு­டன் நில அள­வை­யர்­கள் மூலம் அள­வீடு செய்து, வரு­வாய்­து­றை­யி­னர் மூலம் பட்­டா, மூலப்­பத்­தி­ரம், வில்­லங்கச் சான்று போன்ற ஆவ­ணங்­கள் ஆய்வு செய்­யப்­படும். பின், பத்­தி­ரப்­ப­திவு செய்து நிலம் கைய­கப்­

ப­டுத்­தப்­படும்.

"இதற்­கான இழப்­பீட்டுத் தொகை உரி­மை­யா­ள­ரின் வங்கி கணக்­குக்கு அனுப்­பப்­படும். குடி­யி­ருப்பு நிலத்­துக்கு ஒரு சதுர அடிக்கு 1,500 ரூபா­யும், விவ­சாய நிலத்­துக்கு ஒரு சது­ர­ அடிக்கு 900 ரூபா­யும் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது," என்று கூறி­னார்­கள்.

மேலும் மாவட்ட ஆட்­சி­யர்

சமீ­ரன் கூறு­கை­யில், "விமா­ன­

நி­லைய விரி­வாக்க பணிக்­கான நிலத்தை கைய­கப்­ப­டுத்­தும் பணியை விரைந்து முடிக்க,

அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. மூன்று மாதங்­க­ளாக இதற்­கான பணி­கள் வேக­மாக நடந்து வரு­கின்­றன. விரை­வில் பணி­கள் முடிந்து, தேவை­யான நிலம் முழு­வ­தும் கைய­கப்­ப­டுத்­தப்­படும்,'' என்­றார்.

தற்பொழுது செயல்பட்டுவரும் கோவை அனைத்துலக விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.