மாணவியரை மிரட்டி பணம் பறித்த மாணவர் கொலை

மாணவியரை மிரட்டி பணம் பறித்த மாணவர் கொலை

1 mins read
2f81d2a5-5c5d-455d-bdfd-8563b1c27686
-

சென்னை: ஆபாச பேச்சு உரை­

யா­டலைப் பதிவு செய்து மாண­வி­களை மிரட்டி, பணம் பறித்த

கல்­லுாரி மாண­வன் படு­கொலை செய்­யப்­பட்டு புதைக்­கப்­பட்­டான். இந்த வழக்­கில், மூன்று மாண­வி­யர் உட்­பட ஒன்­பது பேரை காவ­லர் கைது செய்து உள்­ள­னர்.

கொலை செய்­யப்­பட்ட பிரேம்­கு­மார், பதி­னைந்து வய­து­டைய இரு பள்ளி மாண­வி­களுடன் நட்பை ஏற்­ப­டுத்தி அவர்­க­ளு­டன் ஆபா­ச­மாக பேசி, உரை­யா­டலைப் பதிவு செய்­துள்­ளார். அதை வைத்து மாண­வி­களை மிரட்டி பணம்

பறித்­துள்­ளார்.

இதி­லி­ருந்து விடு­பட நினைத்து மாண­வி­யர் 17 வய­து­டைய

கல்­லுாரி மாண­வி­யின் உத­வியை, நாடி­யுள்­ள­னர்.

அவர் அசோக்­கு­மார் என்ற

கல்­லூரி மாண­வ­ரைத் தொடர்பு­கொண்டு பிரேம்­கு­மா­ரி­டம் இருந்து அலை­

பே­சியை பெற்­றுத் தரும்­படி கேட்­டி­ருக்­கிறா்.

பள்ளி மாண­வி­கள் மூல­மாக பிரேம்­

கு­மாரை வர­வ­ழைத்து, அசோக்­கு­மா­ரும் அவ­ரு­டைய நண்­பர்­

க­ளான செங்­குன்­றம் லெவின், 22, ஜெக­நா­த­

பு­ரம் பிர­வின்­கு­மார், 21, நெடு­வ­ரம்­பாக்­கம் ஜெக­நா­தன், 20, ஸ்டீ­பன், 21, ஈகு­வார்­பா­ளை­யம் ஞான­

சே­க­ரன் ஆகி­யோர் பிரேம்­கு­மாரை பொன்னேரி அடுத்த இருளிப்பட்டு கொண்டுசென்று இரவு வரை பலமாக தாக்கினர். பின் இரு­சக்­கர வாக­னத்­தில் ஏற்றிச் சென்று வெட்டி கொலை செய்து புதைத்­துள்­ள­னர்.

பிரேம்­கு­மாரை கொலை செய்த வழக்­கில் பதி­வான வாக்­கு­மூ­லத்­தின் அடிப்­ப­டை­யில், அசோக், லெவின், பிர­வின்­கு­மார்,

ஜெக­நாதன், ஸ்டீ­பன், மோசஸ், இரு பள்ளி மாண­வி­யர், கல்­லுாரி மாணவி என, மொத்­தம் ஒன்­பது பேரை காவலர்கள் நேற்று கைது செய்­த­னர்.