அழுகிய முட்டை: தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

அழுகிய முட்டை: தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

2 mins read
e740e969-d3b6-4cd3-bcd6-3734baa686e6
கெட்டுப்போன முட்டை தண்ணீரில் மிதக்கும் என்பதால், சம்பந்தப்பட்ட பள்ளியின் கையிருப்பில் இருந்த அனைத்து முட்டைகளையும் தண்ணீரில் போட்டு சோதனை செய்கிறார் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்.அங்­கி­ருந்த உண­வுப் பொருள்­க­ளின் தரத்­தை­யும் அவர் ஆய்வு செய்­தார். படம்: தமிழக ஊடகம் -

கரூர்: மாண­வர்­க­ளுக்கு வழங்­கிய சத்­து­ண­வுடன் கெட்­டுப்­போன முட்­டை­களை விநி­யோ­கித்த சத்­து­ணவு அமைப்­பா­ளர், சமை­யல்­ பணியாளர், சத்துணவுப் பணி­கள் முறை­யாக நடக்கிறதா? என கண்­கா­ணிக்­கத் தவ­றிய தலைமை ஆசி­ரி­யர் ஆகி­ய மூவரையும் பணி­யிடை நீக்­கம் செய்து கரூர் மாவட்ட ஆட்­சி­யர் பிர­பு­சங்­கர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

கரூர் மாவட்­டம், தோகை­மலை அருகே உள்ளது நாக­னூர் அரசு ஊராட்சி ஒன்­றிய தொடக்­கப் பள்­ளி. இப்பள்ளி­யில் கடந்த சில நாள்க­ளா­கவே மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் சத்­து­ண­வில் கெட்­டுப்­போன, அழு­கிய முட்­டை­கள் வழங்­கப்­படு­வ­தாக குற்­றச்­சாட்­டு­கள் கூறப்­பட்­டு வருகிறது.

இது­கு­றித்து, ஊர் மக்­கள் பள்ளி நிர்­வா­கத்­தி­டம் நேரில் கேட்­கச் சென்­ற­போது, பள்ளி நிர்­வாகிகள் முறை­யாகப் பதி­ல­ளிக்க வில்லை எனவும் தெரிகிறது.

சத்­து­ண­வுக் கூடத்­தில் இருந்த முட்­டை­கள் அழு­கி­யும் புழுக்­கள் நெளிந்­த­ப­டி­யும் இருந்­த நிலையில், அவற்றை சிலர் காணொ­ளி­யாக எடுத்து சமூக வலைத்­த­ளங்­களில் பதி­விட்­ட­னர்.

இதைத்தொடர்ந்து, சம்­பந்­தப்­பட்ட பள்­ளிக்கு நேரில் சென்ற ஆட்சியர் பிரபு சங்கர், அங்­குள்ள உண­வுப்­பொ­ருள்களையும் இருப்­பில் இருந்த முட்­டை­க­ளின் தரத் தையும் ஆய்வு செய்­தார்.

அதன்பின்னர், பிரபு சங்­கர் செய்தியாளர்களிடம் கூறுகை யில், "அனைத்து உணவுப்பொ­ருட் ­களும் நல்ல நிலை­யில் இருந்தன. தண்­ணீ­ரில் இட்டு பரிசோதித்த போது முட்டைகளும் நல்ல நிலை­யிலேயே இருந்தன.

"இருப்­பி­னும், கடந்த வாரம் வாங்­கப்­பட்ட முட்­டை­களை உரிய காலத்துக்குள் மாணவர்களுக்கு அளிக்­கா­மல், கெட்­டுப்­போன முட்­டை­களையும் பள்­ளி­யில் வைத்­தி­ருந்­தது கண்­ட­றி­யப்­பட்­டது. தர­மில்­லாத முட்­டை­களை வைத்­தி­ருந்த சத்­து­ணவு அமைப்­பா­ளர் தேன்­மொழி, சமை­யல் பணி­யா­ளர் லட்­சுமி, தலைமை ஆசி­ரியை தன­லட்­சுமி ஆகி­யோர் இடைநீக்­கம் செய்யப்பட்டுள்ளனர்," என்­றார்.