26 வயது இளம் நீதிபதி ஆதியான்: தமிழே எனது அடையாளம்

1 mins read
35b93780-d51e-477d-bb66-83a1768ae856
நீதிபதி ஆதியான். படம்: ஊடகம் -

சென்னை: தமிழ் வழி­யில் படித்து 26 வயதே ஆன இளை­ஞர் ஒரு­வர் நீதி­பதி ஆகி­யுள்­ளது மக்­க­ளி­டம் வியப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

"பெற்­றோர் தங்­கள் பிள்­ளை­களை அர­சுப் பள்­ளி­யில் சேர்ப்­ப­தற்­குத் தயங்­கக் கூடாது," என்று இளம் நீதி­பதி ஆதி­யான் வேண்­டு­கோள் விடுத்து உள்­ளார்.

"நீதி­ப­திக்­கான தேர்வு எழு­தி­ய­தில் நான் மட்­டுமே தமிழ் வழி­யில் கல்வி கற்­ற­வன். இதுவே எனது அடை­யா­ள­மாகி உள்­ளது," என்றும் அவர் கூறியுள்ளார்.

மதுரை மாவட்­டம், உசி­லம்பட்­டிைய அடுத்த செட்­டி­ய­பட்­டி­யைச் சேர்ந்­த­வர் ஆதி­யான், 26.

இவர் திருப்­பூர் மாவட்ட கூடு­தல் உரி­மை­யி­யல் நீதி­மன்ற நீதி­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

சென்னை விமான நிலை­யத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய ஆதி யான், "அர­சுப் பள்­ளி­யில் தமிழ் வழிக் கல்­வி­யில் படித்து ஒரு நீதி­பதி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளேன். அர­சுப் பள்­ளி­யில் படித்­தால் இளம் வயதிலேயே என்ைனப் ேபால் நீதி­பதியாக­வும் ஆக­லாம் என்பதற்கு நானே ஒரு முன்­னு­தா­ர­ணம்.

"ஆங்­கி­லம் என்­பது மொழி. அது அறிவு கிடை­யாது. மற்­ற­வர் களுடன் தொடர்­பு­கொள்­வ­தற்கு ஒரு கரு­வி­யாக ஆங்­கில மொழி பயன் படு­கிறது. தாய்­மொழி­யில் கல்வி கற்­றால் உங்­க­ளால் நீங்­கள் படிக்­கும் பாடத்தை தெளி­வா­கப் புரிந்து படிக்­க­மு­டி­யும்," என்றவர், தான் ஒரு தினக்­கூலி விவ­சா­யி­யின் மகன் என்­றும் குறிப்­பிட்­டார்.