15-18 வயதுள்ளோருக்கு தடுப்பூசி ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வருகை

15-18 வயதுள்ளோருக்கு தடுப்பூசி ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வருகை

2 mins read
47c72952-6f8f-4aed-ac9d-8d421948f0b6
-

சென்னை: தமி­ழ­கத்­தில் வரும் ஜன­வரி மாதம் 3ஆம் தேதி முதல், 15 வயது முதல் 18 வய­து­டைய இளம் பிள்­ளை­க­ளுக்கு கொவிட்-19 தடுப்­பூசி போடும் பணி தொடங்க உள்­ள­தாக மருத்­துவ, மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

சென்னை, மடு­வங்­கரை பகு­தி­யில் நேற்று 16வது மாபெ­ரும் தடுப்­பூசி முகா­மைத் தொடங்­கி­வைத்த பிறகு, அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

"மத்­திய அர­சின் உத்­த­ர­வுப்­படி வரும் ஜன­வரி 3ஆம் தேதி முதல் கொவிட்-19 தடுப்­பூசி போடும் பணி சைதாப்­பேட்­டை­யில் உள்ள பெண்­கள் பள்­ளி­யில் தொடங்­கப்­பட உள்­ளது.

"15-18 வய­தில் உள்ள ஏறத்­தாழ 33 லட்­சம் பேர் தடுப்­பூசி போட்­டுக் கொண்டு பாது­காப்பு பெற­லாம்.

"60 வய­தைக் கடந்த 1.04 கோடி பேர் கூடு­தல் (பூஸ்­டர்) தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள தகுதி பெற்­றுள்­ள­னர்," என்­றார்.

இந்­தி­யா­வில் ஓமிக்­ரான் கிரு­மிப்பர­வல் இது­வரை 17 மாநி­லங்­களில் கண்­ட­றி­யப்­பட்­டுள்ள நிலை­யில், அதிக பர­வல் உள்ள மாநி­லங் ­க­ளின் வரி­சை­யில் தமி­ழ­கம் மூன்றாவது இடத்­தில் உள்­ளது.

இந்­நி­லை­யில், ஓமிக்­ரான் தடுப்பு நட­வ­டிக்­கை­களை ஆய்வு செய்­வ­தற்காக நால்­வர் கொண்ட மத்­தி­யக்­கு­ழு­வி­னர் நேற்று இரவு தமி­ழ­கத்­துக்கு வருகை தர உள்­ள­தா­க­வும் தக­வல்­கள் தெரி­வித்­தன.

ஏற்­கெ­னவே, ஓமிக்­ரான் தொற்று உறுதி செய்­யப்­பட்­டி­ருந்த 34 பேரில் 12 பேர் குண­ம­டைந்து இல்­லம் திரும்­பிய நிலை­யில், மற்­ற­வர்­க­ளுக்குச் சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில், வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்த 39 பேருக்கு ஓமிக்­ரான் அறி­குறி உள்­ள­தாக சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­மணி­யன் கூறி­யுள்­ளார்.

இவர்­க­ளது மாதி­ரி­கள் புனே ஆய்­வ­கத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட உள்­ள­தா­க­வும் சொன்­னார்.

இதற்­கி­டையே, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்­து­வ­ம­னை­யில் ஓமிக்­ரான் சிறப்பு வார்டு, உயிர்­வாயு உற்­பத்தி நிலை­யம் உள்­ளிட்ட மருத்­து­வக் கட்­ட­மைப்­பு­களை முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேற்று நேரில் ஆய்வு செய்­தார்.

"மாநி­லம் முழு­வ­தும் உள்ள அரசு மருத்­து­வ­ம­னை­களில் 1.50 லட்­சம் படுக்­கை­கள் தயாா் நிலை­யில் உள்­னன. அத்­து­டன், உயிர்­வாயு வச­தி­யைப் பொறுத்­த­வரை 1,400 டன் அள­வுக்கு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது," என்று சுகா­தா­ரச் செய­லா­ளர் ராதா­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

நடி­கர் வடி­வே­லுக்கு கொரோனா

"நகைச்சுவை நடிகா் வடி­வேலு, இயக்­குநா் சுராஜ் ஆகி­யோ­ருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்டு, சிகிச்சை பெற்று வரு­கின்­றனா்.

"ஓமிக்­ரான் பர­வ­லைக் கருத்­தில் கொண்டு, பெரிய நட்­சத்­திர விடு­தி­களில் புத்­தாண்டுக் கொண்­டாட்­டத்தைத் தவிர்க்­க­வேண்­டும்," என்று ராதா­கி­ருஷ்­ணன் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.