நூறாண்டுகளாக மின்சாரம், குடிநீர், கழிவறை வசதியின்றி அல்லல்: 'மலை ஒட்டர்கள்' வேதனை

நூறாண்டுகளாக மின்சாரம், குடிநீர், கழிவறை வசதியின்றி அல்லல்: 'மலை ஒட்டர்கள்' வேதனை

2 mins read
ba46989f-ecff-4c26-8cd5-362a1cc1b8a8
விளக்கொளியில் படித்து வருவதாகக் கூறும் அல்­லித்­துறை சிறுமி. படங்கள்: ஊடகம் -
multi-img1 of 2

திருவரங்­கம்: திருச்சி மாவட்­டம், திருவரங்­கம் அருகே 'மலை ஒட்­டர்­கள்' என்ற பழங்­கு­டி­யின வகுப்பைச் சார்ந்த மக்­கள் வசித்து வருகின்­ற­னர்.

இவர்கள், இந்த உல­கமே நவீன­ம­ய­மாய் மாறி வரும் சூழலில், தங்­க­ளது வாழ்க்கை மட்டும் இன்­னும் இரு­ளி­லேயே இருப்­ப­தாக வேத­னைப்­ப­டு­கின்­ற­னர்.

கடந்த 100 ஆண்­டு­க­ளாகவே மின்­சார இணைப்பு, குடி­நீர், கழி­வறை, சாலை உள்­ளிட்ட எந்தவோர் அடிப்­படை வச­திகளும் இன்றி தவித்து வரு­வ­தாக குற்­றம்சாட்டி யுள்ள இப்பழங்­கு­டி­யின மக்­கள், "எங்­க­ளது கிரா­மத்­தில் இருந்து எங்­களை வெளி­யேற்­ற­வும் முயற்சி எடுத்து வருகின்றனர். இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு எல்­லாம் மாநில அரசு ஒரு தீர்வு காணவேண்­டும்," என வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

திருச்சி மாவட்­டம், திருவரங்­கத்தில் உள்ள அல்­லித்­துறை என்ற கிரா மத்தில் இந்த 'மலை ஒட்­டர்­கள்' வசித்து வரு­கின்­ற­னர்.

இவர்­கள், கடந்த 100 ஆண்டு களாக அல்­லித்­துறை பகு­தி­களில் உள்ள வீடு­களில் துப்­பு­ர­வுப் பணி­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

ஆனால், தற்­போது வீடு­கள் தோறும் நவீன கழி­வறை வச­தி­கள் வந்­த­பி­றகு இதுவரை இருந்து வந்த வேலை­களும் இல்­லா­மல் போனது.

இதை­ய­டுத்து, ஆடு, மாடுகள் வளர்ப்பதுடன், அன்­றாட கூலி வேலைக்கும் சென்று வரு­கின்­ற­னர்.

காசு பண­மின்றி வறுமையுடன் பாழ­டைந்த வீடு­களில் வாழும் இவர்­கள், எந்த அடிப்­ப­டை வசதியும் இன்றி அல்­லல்­பட்டு வரு­கின்­ற­னர்.

இவர்­க­ளி­டம் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்­கா­ளர் அடை­யாள அட்டை என அனைத்து வகையான ஆவ­ணங்­களும் உள்­ளன. கடந்த ஆண்டுவரை வீட்டு வரி­யும் செலுத்தி உள்­ள­னர்.

ஆனால், தாங்கள் என்னவோ இப்போதுதான் குடியேறியவர்கள் போல் பஞ்­சா­யத்து அலு­வ­ல­கத்­தில் வீட்டு வரி வாங்க மறுப்­ப­தா­க­வும் தங்­களை இந்த இடத்­தில் இருந்து வெளி­யேற்ற முயற்சி நடப்­ப­தா­க­வும் அவர்கள் குற்­றம்சாட்டுகின்றனர்.