'68 மீனவர்களை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும்'

'68 மீனவர்களை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும்'

1 mins read
282ed056-578a-49c0-8912-971acd9438a8
-

ராமேஸ்­வ­ரம்: இலங்கை கடற்­படை யின­ரால் அண்­மை­யில் கைது செய்­யப்­பட்ட 68 மீன­வர்­களை விடு­தலை செய்­யும்­வரை எங்­க­ளது போராட்­டம் தொட­ரும் என்று மீன­வர்­கள் சங்­கங்­கள் அறி­வித்­துள்­ளன.

வரும் ஜன­வரி மாதம் 1ஆம் தேதி­யன்று ரயில் மறி­யல் போராட் டத்தை நடத்­த­வும் அனைத்து விசைப்­ப­டகு மீன­வர் சங்­கக் கூட் டத்­தில் முடிவு எடுத்­துள்­ள­னர்.

கைது செய்­யப்­பட்ட 68 மீன­வர்­களை விடு­விக்­கக்­கோ­ரி­யும் 10 விசைப் பட­கு­க­ளைத் திரும்ப ஒப்­ப­டைக்­க­வும் கோரி ராமேஸ்­வ­ரம், தங்­கச்­சி­ம­டம், புதுக்­கோட்டை உள்­ளிட்ட பகு­தி­க­ளைச் சேர்ந்த மீன­வர்­கள் கட­லுக்கு மீன்­பி­டிக்­கச் செல்­லா­மல் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

முதல்­வர் மு.க.ஸ்டா­லின் ஒரு வாரத்­துக்கு முன்பு, மீன­வர்­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கும்­படி வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­சர் ஜெய்­சங்­க­ரிடம் வலி­யு­றுத்தி இருந்­தார். ஆனால், இது­வரை மீன­வர்­கள் விடு­விக்­கப்­ப­டா­த­தால், அனைத்து மீன­வர் சங்­கங்­க­ளின் அவ­சரக் கூட்­டத்­தில் போராட்­டத்­தைத் தொடர்­வ­தற்கு முடிவு எடுத்­துள்­ளதாக கூறியுள்ளனர்.