சைப்ரஸ் நாட்டு பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி: ஆடவர் கைது

சைப்ரஸ் நாட்டு பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி: ஆடவர் கைது

1 mins read
09fa7190-c033-4575-aa7e-756d43b1e960
-

சென்னை: ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி, சைப்ரஸ் நாட்டு பெண்ணிடம் ரூ.10 லட்சத்தை மோசடி செய்த ஆடவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துைறயினர் கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

சைப்ரஸ் நாட்டில் வசிக்கும் பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையருக்கு அனுப்பிய புகாரில், திருவான்மியூரைச் சேர்ந்த அருண்பிரசாத் என்பவர் தன்னிடம் ஃபேஸ்புக் மூலம் பழகி, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.10 லட்சம் வரை மோசடி செய்து என்னுடனான தொடர்பை முறித்துக்கொண்டார். மேலும் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தன்னை ஏமாற்றியதாகவும் தெரிவித்திருந்தார்.