மதுரை: வீட்டில் உள்ள அைறயில் தான் குண்டலினி யோகா செய்யப் போவதாகவும் தன்னை யாரும் ெதாந்தரவு செய்யவேண்டாம் என்றும் கூறிய சிவபக்தர் ஒருவர், மூன்று நாள்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
மதுரை சூர்யா நகரைச் சேர்ந்தவர் மல்லிகா. இவரது மூத்த மகன் ஜெகதீசன், சென்னையில் ஐஐடியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் பணியை விட்டுவிட்டு தாயுடன் தங்கி இருந்துள்ளார். சிவபக்தரான ஜெகதீசன், நாள்தோறும் தவம் செய்வதாகக் கூறி பல்வேறு யோகாசனங்களையும் செய்துவந்துள்ளார்.
கடந்த 22ஆம் தேதியன்று குண்டலினி யோகா செய்யப் போவதாகவும் மூன்று நாள் களுக்கு தன்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் தங்கை, தாயிடம் கூறிவிட்டு, அறையை பூட்டி விட்டு யோகா செய்யத் தொடங்கியுள்ளார். அறையில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், உடல் அழுகிய ஜெகதீசன் மீட்கப்பட்டார்.

