மண் பானை, அடுப்புகள் தயாரிப்புப் பணி மும்முரம்

1 mins read
b055a365-ae92-4080-86b9-bb396312f5fb
ஏம்பலம் கிராமத்தில் மண் அடுப்பு செய்யும் பணியில் தொழிலாளர் ஒருவர் ஈடுபடுகிறார். படம்: தமிழக ஊடகம் -

மேல்­ம­லை­ய­னூர்: மேல்­ம­லை­ய­னூர், ஏம்­ப­லம் உள்­ளிட்ட கிரா­மப் பகு­தி­களில் வசிக்­கும் மண்­பாண்­டத் தொழி­லா­ளர்­கள், வரும் ஜன­வரி மாதம் 14ஆம் தேதி ெகாண்­டா­டப்­பட உள்ள பொங்­கல் பண்­டி­கைக்­காக மண்­ணா­லான அடுப்பு, பானை, சட்­டி­கள் தயா­ரிக்­கும் பணி­யில் மும்­மு­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

இது­கு­றித்து மண்­பாண்டத் தொழி­லா­ளர்­கள் கூறு­கை­யில், பொங்­கல் பண்­டி­கைக்­குத் தேவை­யான ஒற்றை, இரட்டை அடுப்­பு­கள் என இரண்டு வகை­களில் செய்­கி­றோம். ஒற்றை அடுப்பு ரூ.75க்கும், இரட்டை அடுப்பு ரூ.100க்கும் விற்­பனை செய்ய உள்­ளோம்.

அதே­போல் ரூ.25 முதல் ரூ.100 வரை­யில் மண்­பா­னை­களை விற்க உள்ளோம். கடந்த காலங்­களில் மண்­பாண்ட பொருட்­க­ளுக்கு அதிக கிராக்கி இருந்ததால், எங்­க­ளுக்கு நல்ல வரு­மா­னமும் இருந்தது. இப்­போது விற்­பனை குறைந்து, வரு­மான இழப்பு ஏற்­பட்­டுள்­ளது. பானை­கள் தயா­ரிக்க ஏரி­களில் வண்­டல் மண் எடுப்­ப­தற்கு அரசு எங்­க­ளுக்கு அனு­மதி அளித்­தி­ருந்­தா­லும், மண் தட்­டுப்­பாடு ஏற்­ப­டு­வதைத் தடுக்க அரசு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்­ற­னர்.