கோவையில் மாதம் 10 நாள்களில் மக்கள் பணி

கோவையில் மாதம் 10 நாள்களில் மக்கள் பணி

1 mins read
c59aa754-98a2-4241-b744-7f59d41c25e0
-

கோவை: விரை­வில் நடக்க உள்ள உள்­ளாட்­சித் தேர்­த­லில் திமு­கவை மக்­கள் வெற்­றி­பெற வைத்­தால், கோவை­யி­லேயே தங்கி மாதந்­தோறும் 10 நாட்­க­ளுக்கு மக்­க­ளுக்­குத் தேவை­யான பணி­க­ளைச் செய்­து­த­ரு­வேன் என்று திமுக இளை­ஞ­ரணி செய­லா­ளர் உத­ய­நிதி ஸ்டா­லின் எம்­எல்ஏ கூறி­யுள்­ளார்.

"கோவை­யில் அதி­முக வென்ற தற்கு பணம் ஒரு முக்­கிய காரண மாக இருந்­தா­லும் நம்­மி­டையே ஒற்­றுமை இல்­லா­த­தும் ஒரு கார­ணம்­தான்," என்றார் அவர்.

கோவை மாவட்ட திமுக சார்­பில் கொடி­சியா மைதா­னத்­தில் நடந்த மாந­க­ராட்சி, நக­ராட்சி, பேரூ­ராட்சி உள்­ளிட்ட நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லுக்­கான பொறுப்­பா­ளர்­கள் கூட்­டத்­தில் பேசிய உத­ய­நிதி ஸ்டா­லின், "நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் பல்­வேறு இடங்­களில் திமுக வெற்றி பெற்­றா­லும் கோவை மக்­கள் ஏமாற்றி விட்­ட­னர். கடந்த ஆட்­சி­யில் அமைச்­ச­ராக இருந்த எஸ்.பி.வேலு­மணி உள்­ளிட்­டோர் பணத்­தைக் கொடுத்து தேர்­த­லில் வெற்றி பெற்­றுள்­ள­னர்.

"மீண்­டும் கோவை மக்­கள் எங்­களை ஏமாற்றிவிடலாம் என்று கற்பனையில் கூட நினைக்கக் கூ­டாது. எந்த பொறுப்­புக்­கும் நான் ஒரு­நா­ளும் ஆசைப்­பட்­டது கிடை­யாது. தலை­வ­ருக்­கும் உங்­க­ளுக்­கும் ஒரு பால­மாக இருக்­க­வேண்­டும் என்­பதே என் எண்­ணம்," என்று அவர் கூறி­யுள்­ளார்.