செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c9124fe0-0a5e-4652-a7b8-57f087d912f0
-

தமிழக மீனவர்களை நிச்சயம் மீட்போம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ரகுபதி, "இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசின் வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் தமிழக மீனவர்களை மீட்டது போலவே இம்முறையும் நிச்சயமாக மீட்போம்," என்றார்.

இதற்கிடையே, தமிழக மீனவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகனும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

பின்னணிப் பாடகர் மாணிக்க

விநாயகம் மறைவு: முதல்வர் இரங்கல்

சென்னை: பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பல பாடல்களை பாடி துன்பமானாலும் துள்ளலானாலும் தனது குரல்வளத்தால் ரசிகர்களுக்கு விருந்தளித்தவர் மாணிக்க விநாயகம் எனக் கூறினார். பெயரைப் போலவே பண்பிலும் அவர் மாணிக்கமாக உயர்ந்தவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

நிபுணர் குழு ஐந்து நாள்கள் கண்காணிப்பு

சென்னை: ஓமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுவதற்காக மத்திய நிபுணர் குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். இவர்கள், தமிழகத்தில் ஐந்து நாள்களுக்குத் தொடர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் 'ஒமிக்ரான்', கொரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக் கைகள் குறித்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைகளை வழங்குவார்கள் எனவும் கூறப்படுகிறது.

சிறுமி பலாத்காரம்: குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப் பட்டினம் அருகே 14 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதே பகுதியைச் சேர்ந்த அம்ஜத்கான், 44, என்பவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி கருவுற்றார்.