பெண் சாமியார் அன்னபூரணி அருள்வாக்கு கூற தடை

பெண் சாமியார் அன்னபூரணி அருள்வாக்கு கூற தடை

1 mins read
e72806c2-21ca-42fe-b6f7-cf8f6bda7967
-

செங்­கல்­பட்டு: தனி­யார் திரு­மண மண்­ட­பத்­தில் நடை­பெற இருந்த பெண் சாமி­யா­ர் அன்­ன­பூ­ர­ணி­யின் (படம்) அருள்­வாக்கு நிகழ்ச்­சிக்கு செங்­கல்­பட்டு காவல்துறை அதி­கா­ரி­கள் தடை விதித்­துள்­ள­னர்.

ஓமிக்­ரான் பர­வல் கார­ண­மாக திரு­மண மண்­ட­பத்­தில் எந்த நிகழ்ச்­சி­யை­யும் நடத்­தக்­கூ­டாது என்று அன்­ன­பூ­ர­ணி­யின் அருள்வாக்கு நிகழ்ச்சி நடை­பெற இருந்த திரு­மண மண்­டப உரி­மை­யா­ளரை எச்­ச­ரித்து உள்­ள­னர்.

பெண் சாமி­யார் ஒரு­வர் கடந்த இரு நாட்­க­ளாக சமூக வலைத்­தளங்­களில் மிக­வும் பிர­ப­ல­மாகி வரு­கி­றார்.

'அன்­ன­பூ­ரணி அம்­மாள்' என்ற பெய­ரில் அழைக்­கப்­படும் பெண் சாமி­யார், பட்­டுச்­சேலை அணிந்து கொண்டு காரில் இருந்து இறங்கி நடந்து செல்­கி­றார். தனது வலது கையை காட்­டி­ய­ப­டியே பக்­தர்­க­ளுக்கு ஆசி வழங்­கிக்கொண்­டி­ருக்­கும் பெண் சாமி­யா­ரின் காலில் விழுந்து பெண்­கள், ஆண்­கள், குழந்தைகள் வழி­படுகிறார்­கள்.

சொல்­வ­தெல்­லாம் உண்மை தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யில் கடந்த 2014 ஆம் ஆண்­டில் பங்­கேற்­ற­வர் அன்­ன­பூ­ரணி.

சொல்­வ­தெல்­லாம் உண்மை நிகழ்ச்­சியை நடத்­திய லட்­சுமி ராம­கி­ருஷ்­ணன் கூறுகையில், ஏமா­று­கி­ற­வர்­கள் இருக்­கி­ற­வரை இப்­படி ஏமாற்­று­ப­வர்­கள் இருக்­கத்­தான் செய்­வார்­கள் என்­று வேதனை தெரி­வித்­துள்­ளார்.