புதுக்கோட்டை: கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த முட்டை வியாபாரி ஒருவரது வீட்டின் பூட்டை உடைத்து 850 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையர்கள் களவாடிச் சென்றுள்ளனர்.
இரவு நேரத்தில் திட்டமிட்டு இந்தக் கொள்ளைச் சம்பவத்தை கொள்ளையர்கள் அரங்கேற்றி உள்ளனர் என்றும் தங்களது அடை யாளத்தைக் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக வீட்டில் இருந்த இரும்பு பீரோ, மர அலமாரி கள் மீது மிளகாய்ப்பொடியைத் தூவிவிட்டுச் சென்றுள்ளனர் என் றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோட்ைடப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாபர் ஜாதிக், 45. இவர், புருணை நாட்டில் பத்து முட்டைக் கடைகளை யும் பல்பொருள் அங்காடிகளையும் நடத்தி வருகிறார். எனவே, தனது குடும்பத்துடன் அங்கேயே வசித்து வருகிறார்.
இந்நிலையில், சொந்த ஊரில் உள்ள தனது வீட்டை கண்காணித் துக்கொள்ள தனது அக்காவிடம் சொல்லிவிட்டு வெளிநாடு சென்று விட்டார்.
தினசரி தம்பி வீட்டிற்குச் சென்று மின்விளக்குகளை எரிய விடும் அக்கா, கடந்த இரு நாள்க ளாக வெளியூர் சென்றுவிட்டதால் அந்த வீட்டிற்குச் செல்லவில்லை.
இந்நிலையில், வெளியூர் சென்றி ருந்த ஜாபர் சாதிக்கின் அக்கா நேற்று முன்தினம் மாலை வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
மிளகாய்ப் பொடி தூவப்பட்டி ருந்ததால் மோப்ப நாய் யாரையும் பிடிக்கவில்லை. தொடர் திருட்டு சம்பவங்களால் கிராமமே அச்சத்தில் உள்ளதாகக் கூறுகின்றனர் கிராம மக்கள். மீமிசல் காவல்துறையினர் விசாரணை செய்கின்றனர்.

