அரசுப் பணி வழங்குவதாக போலி நேர்முகத் தேர்வு: மோசடியில் ஈடுபட்ட எட்டு பேர் கைது

அரசுப் பணி வழங்குவதாக போலி நேர்முகத் தேர்வு: மோசடியில் ஈடுபட்ட எட்டு பேர் கைது

1 mins read
51802e53-f6cf-48e5-8daf-b0e4b1f1cc05
திருப்­பத்தூா் சென்ற சென்னை காவல்துறையின் மத்­தி­யக் குற்­றப்­பி­ரி­வின் தனிப்­ப­டை­யினா், திருப்­பத்­தூ­ரைச் சோ்ந்த சூா்யா, 38, அருண்­குமாா், 37, தா்மலிங்­கம், 46, தயா­நிதி, 41, ராஜேஷ், 29, சக்­கர­வா்த்தி, 45, பிரபு, 42, யோகா­னந்­தம், 32, ஆகிய எட்டு பேரைக் கைது செய்­தனா். படம்: ஊடகம் -

திருப்­பத்­தூர்: வேலை வாய்ப்­பு­களை வழங்­கு­வ­தாக போலி நேர்­மு­கத் தேர்­வு­களை நடத்தி, மாநி­லத்­தின் பல பகு­தி­க­ளி­லும் உள்ள நூற்­றுக்­கும் மேற்­பட்­டோ­ரி­டம் வேலை தரு­வ­தா­கக் கூறி ரூ.1.5 கோடிக்கு மேல் பணம் பறித்த எட்டு பேரை மத்­திய குற்­றப்­பி­ரிவு காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

திருப்­பத்­தூ­ரில் அகில இந்­திய தொழில்­நுட்­பக் கல்­விக்­கு­ழு­வின் பெய­ரில் போலி நேர்­மு­கத்­தேர்­வு­களை நடத்தி, பணி நிய­மன ஆணை­களை வழங்­கிய எட்டு பேரை ைகது செய்­துள்ள போலி­சார், அவர்­களை ஐந்து நாள்­கள் காவ­லில் எடுத்து விசா­ரிக்க உள்­ள­னர்.

சென்னை காவல்­துறை ஆணை­ய­கத்­தில் அண்­மை­யில் ஆா்.சுந்­த­ரே­சன் என்­ப­வர் அளித்திருந்த புகா­ரில், ஒரு மோச­டிக் கும்­பல் மதுரை, கோயம்­புத்தூா், காஞ்­சி­பு­ரம், சேலம் ஆகிய இடங்­களில் போலி நோ்முகத் தோ்வை நடத்தி, பண மோசடி செய்து வரு­கிறது. இவர்­களை நம்பி பணத்தை கொடுத்து ஏமாந்­த­வா்­கள், எங்­களை அணுகி வேலை கேட்­கின்­றனா். எனவே குற்றவாளிகளைக் கைது செய்து நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று குறிப்­பி­ட்டிருந்தார்.

திருப்­பத்தூரில் கைதான எட்டு பேைரயும் சென்­னைக்கு அழைத்து வந்து, 15 நாள் நீதி­மன்றக் காவ­லில் சிறை­யில் அடைத்­த­னர்.