தமிழ்நாட்டின் கோவையை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் கடந்த சில நாள்களாக சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்து வருகிறது.
அதைப் பிடிப்பதற்காக கோவைப்புதூர் பகுதியில் கூண்டு வைக்கப்பட்டு இருந்தது. இருந்தபோதிலும், அந்த சிறுத்தை கூண்டுக்குள் சிக்கவில்லை.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்திற்குள் சென்று, அங்கிருந்த இரு நாய்களை அந்த சிறுத்தை அடித்துக் கொன்றது.
அந்த சிறுத்தை, கல்லூரி வளாகத்துக்குள் செல்வதும் அங்கிருந்த படிக்கட்டுகளில் லாவகமாக இறங்குவதும் அங்கு காயப்போடப்பட்டிருந்த துணியை நுகர்வதும் கண்காணிப்பு கருவியில் பதிவாகி உள்ளது.
அந்தக் காணொளி காட்சிக் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.


