தமிழகத்தில் 45 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு

தமிழகத்தில் 45 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு

1 mins read
00b7fd40-5bce-4ce7-963e-5f5248232883
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் இரண்டாயிரத்துக் கும் அதிகமா னோர் பாாதிக்கப் பட்டுள்ளதை அடுத்து, அங்குள்ள ரயில் நிலையங்களில் கொரோனா பரிசோதனை அதிகரித்துள்ளது.படம்: ஏஎஃப்பி -

சென்னை: தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தி­னம் மேலும் 11 பேருக்கு ஓமிக்­ரான் தொற்­றுப் பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டதை அடுத்து, பாதிக்­கப்­பட்­டோர் மொத்த எண்­ணிக்கை 45ஆக அதி­க­ரித்­துள்­ளது. இவர்­களில் 24 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர். 24 பேர் சிகிச்­சை­யில் உள்­ள­னர்.

இதற்­கி­டையே, சென்­னை­யில் நேற்று முன்­தி­னம் புதி­தாக 194 பேருக்கு கிருமி தொற்­றி­யுள்­ளது.

மாநி­லம் முழு­வ­தும் 619 பேர் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், சென்­னை­யில் தொற்று அதி­க­ரித்து வருவது கவலை அளிப்­ப­தாக சுகா­தாரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

சென்­னை­யில் நீண்ட நாள்­களுக்­குப் பிறகு ஒரு தெரு தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட தெரு­வாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. சென்னை அசோக் நக­ரில், ஒரே தெரு­வில் உள்ள இரண்டு வீடு­க­ளைச் சேர்ந்த பத்து பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்­பட்டுள்­ளது. இதை­ய­டுத்து அந்தத் தெரு தனிமைப்­ப­டுத்­தப்­பட்ட பகு­தி­யாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், முகக்­க­வ­சம் அணி­வ­தில் சென்னை மக்கள் முன்னு­தா­ர­ண­மாக இருக்க வேண்டும் என மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பிர­ம­ணி­யன் வேண்டு­கோள் விடுத்­துள்­ளார்.

நாடு முழுவதும் ஓமிக்ரான் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 781ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 19 நாள்களுக்குப் பிறகு அன்றாடம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் ஒன்பது ஆயிரத்தைக் கடந்துள்ளது.