புத்தாண்டுக் கொண்டாட்டம்: சென்னையில் கட்டுப்பாடுகள்

புத்தாண்டுக் கொண்டாட்டம்: சென்னையில் கட்டுப்பாடுகள்

3 mins read
f9d7ad2b-312e-43ef-ad80-4db54ec06dd8
-

கடற்கரை சாலைகளில் செல்லவும் பொது இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை

சென்னை: ஆங்­கி­லப் புத்­தாண்டுக் கொண்­டாட்­டங்­க­ளுக்­காக பொது­மக்­கள் வெளி­யி­டங்­களில் ஒன்று­கூட வேண்­டாம் என தமி­ழக காவல்­துறை கேட்­டுக்கொண்டுள்ளது.

சென்­னை­யில் புத்­தாண்டுக் கொண்­டாட்­டத்­துக்குக் கட்­டுப்­பாடு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ள­ன. மேலும், கடற்­கரை சாலை­களில் செல்­ல­வும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­து என சென்னை காவல்­துறை ஆணை­யர் சங்­கர் ஜிவால் தெரி­வித்­துள்­ளார்.

எதிர்­வ­ரும் 31ஆம் தேதி இரவு புத்­தாண்டுப் பிறப்பை கொண்­டாடு­வோர், ஓமிக்­ரான் பர­வல் அபாயத்தை மன­திற்­கொண்டு அர­சாங்­கம் வகுத்­துள்ள கொரோனா நடத்தை விதி­மு­றை­களை முழுமை­யா­கக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்­றும் பிற­ரது உணர்­வு­கள் புண்­ப­டாத வகை­யில் புத்­தாண்டுப் பிறப்­பைக் கொண்­டாட வேண்­டும் என்­றும் காவல்­துறை அறி­வு­றுத்தி உள்­ளது.

ஓமிக்­ரான் தொற்­றுப் பர­வலைத் தடுக்­கும் வகை­யில், தமி­ழக அரசு மாநி­லம் முழு­வ­தும் சில தளர்­வு­களு­டன் கூடிய ஊர­டங்கை அமல்­படுத்­தி­ உள்­ளது.

இந்­நி­லை­யில், ஆங்­கி­லப் புத்­தாண்­டை­யொட்டி காவல்­துறை முக்கிய அறி­வு­றுத்­தல்­களை வழங்கி உள்­ளது.

டிசம்­பர் 31ஆம் தேதி­யன்று (நாளை) இரவு ஒன்பது மணி முதல் சென்­னை­யில் மெரினா கடற்­கரை சாலை­யில் வாக­னங்­கள் செல்ல தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், மெரினா கடற்­கரை, பெசன்ட்­ந­கர் எலி­யட்ஸ் கடற்­கரை, நீலாங்­கரை, கிழக்கு கடற்­கரை சாலையை ஒட்­டி­யுள்ள கடற்­கரைப் பகு­தி­களில் பொது­மக்­கள் ஒன்­று­கூட வேண்­டாம் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சென்­னை­யில் உள்ள முக்கிய சாலை­களில் வாக­னங்­களை நிறுத்தி புத்­தாண்டுக் கொண்­டாட்­டங்­களில் ஈடு­ப­டக்கூடாது என்­றும் சொகுசு விடு­தி­கள், பண்ணை வீடு­கள், மாநாட்டு அரங்கு­களில் புத்­தாண்­டுப் பிறப்­புக்­காக வர்த்­தக ரீதி­யாக நிகழ்ச்சி­களை நடத்­தக்­கூ­டாது என்­றும் காவல்­துறை திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளது.

அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பு­களில் புத்­தாண்டு நிகழ்ச்­சி­களை ஒன்­று­கூடி நடத்­தக்­கூ­டாது என்று குறிப்­பிட்­டுள்ள காவல்­துறை கேளிக்கை விடு­தி­கள், பொது இடங்­களில் நடன, பொழு­து­போக்கு நிகழ்ச்­சி­களை நடத்­த­வும் அனு­மதி இல்லை எனக் கூறி­யுள்­ளது.

சென்னை பெரு­ந­கர காவல்­துறை­யி­னர் 31ஆம் தேதி­யன்று இரவு முக்­கிய இடங்­களிலும் சென்னை­யின் பல்­வேறு பகுதிகளி­லும் சோத­னைச்­சா­வ­டி­கள் அமைத்து, பொது­மக்­கள் கூடும் இடங்­கள் கண்­கா­ணிக்­கப்­படும் என காவல் ஆணை­யர் தெரி­வித்­தார்.

காவ­லர்­கள் சுற்­றுக்­கா­வல் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், அநா­க­ரிகச் செயல்­களில் ஈடு­ப­டு­வோர் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனக் கூறி­யுள்­ளார்.

மேலும், சென்­னை­யில் வரும் 31ஆம் தேதி இரவு இரு­சக்­கர வாக­னங்­களை வைத்து பந்­த­யம் நடத்­த­வும் காவல் துறை தடை விதித்து உள்­ளது.

வாக­னங்­களில் வேக­மா­கச் செல்­ப­வர்­கள் மீது நட­வடிக்கை பாயும் என்­றும் எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, அனைத்து வழி­பாட்டுத் தலங்­க­ளி­லும் அரசு வகுத்­துள்ள வழி­காட்டி நெறி­முறை­களை பொது­மக்­கள் கட்­டா­யம் பின்­பற்ற வேண்­டும் என தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

பல மாநிலங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தடை

டெல்லி, மகா­ராஷ்­டிரா, கர்­நாடகா, கேரளா, மத்­தி­யப் பிர­தே­சம், குஜ­ராத், உத்­த­ரப் பிர­தே­சம், ஒடிசா ஆகிய எட்டு மாநி­லங்­களும் புத்­தாண்டுக் கொண்­டாட்­டங்­க­ளுக்குத் தடை விதித்­துள்­ளன.

பொது இடங்களில் அதிக அளவிலான மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தி உள்ளன.

மகாராஷ்டிராவில் இரவு ஒன்பது மணி முதல் காலை ஆறு மணி வரை ஐந்து பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடுவதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.