மின்னிலக்க பண மோசடி: ரூ.4.5 லட்சம் இழந்த இளைஞர்

மின்னிலக்க பண மோசடி: ரூ.4.5 லட்சம் இழந்த இளைஞர்

2 mins read
8864b8eb-c753-4899-b89a-c5667b237f4c
-

சென்னை: மின்­னி­லக்க பணத்­தில் (க்ரிப்டோ கரன்சி) முத­லீடு செய்­தால் குறு­கிய காலத்­தில் பெருந் தொகை­யைப் பெற­லாம் என ஆசை காட்டி தமி­ழ­கத்­தைச் சேர்ந்­த­வர்­களிடம் இருந்து சில வெளி­நாட்­டுக் கும்­பல்­கள் பணம் பறித்து மோசடி செய்­வ­தாக காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

இளம் பெண்­களை தொலை­பேசி­யில் பேச வைத்து ஏமாற்­று­வ­தால் அனை­வ­ரும் கவ­ன­மாக இருக்க வேண்­டும் என்­றும் காவல்­துறை எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

சென்­னை­யைச் சேர்ந்த இளை­யர் ஒரு­வர், அண்­மை­யில் 4.5 லட்­சம் ரூபாயை இழந்­துள்­ளார். தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னத்­தில் பணி­யாற்றி வரும் அந்த இளை­ஞரை இளம் பெண் ஒரு­வர் இணைய செயலி மூலம் சில வாரங்­க­ளுக்கு முன்பு தொடர்­பு­கொண்டு பேசி­யுள்ளார்.

தாம் சீனா­வில் வசிப்­ப­தாக அறி­மு­கப்­ப­டுத்­திக்கொண்டு நட்­பா­கப் பேசி­யதை அடுத்து, இரு­வ­ரும் தங்­க­ளது தனிப்­பட்ட கைபேசி எண்­க­ளைப் பரி­மா­றிக்­கொண்­ட­னர்.

ஒரு கட்­டத்­தில் தம்­மைக் காத­லிப்­ப­தாக இளம் பெண் கூறி­ய­தைக் கேட்டு, அவரை முழு­மை­யாக நம்­பத் தொடங்கி உள்­ளார் அந்த இளை­ஞர்.

அந்­தப் பெண் 'பிட்­காய்ன்'களில் முத­லீடு செய்­தால் குறு­கிய காலத்­தில் கோடீஸ்­வ­ரர் ஆகி­வி­ட­லாம் என்று கூறி­ய­து­டன், குறிப்­பிட்ட இணை­ய­த­ளம் ஒன்­றில் முத­லீடு செய்­யு­மாறு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளார்.

அதை ஏற்று தொடக்­கத்­தில் சில ஆயி­ரங்­களை முத­லீடு செய்த இளை­ய­ருக்கு ஓர­ளவு லாபம் கிடைத்­துள்­ளது. அத­னால் அண்­மை­யில் மொத்­த­மாக ரூ.4.5 லட்­சத்தை முதலீடு செய்­துள்­ளார்.

ஆனால், அவர் எதிர்­பார்த்­த­படி லாபம் கிடைக்­க­வில்லை என்­பதுடன், அவர் தொடர்புகொண்ட அந்த இணை­ய­த­ள­மும் திடீ­ரென மாய­மாகி உள்­ளது. தம்­மி­டம் பேசிய சீனப்­பெண்ணைத் தொடர்பு கொண்டு பேசி­ய­போது, தம்மை மலே­சிய காவல்­துறை கைது செய்­து­விட்­ட­தா­க­வும் தாமும் ஏமாற்­றப்­பட்டு விட்­ட­தா­க­வும் கூறி­யுள்­ளார்.

அதன் பின்­னர் அந்த இளை­ய­ரால் அப்­பெண்­ணைத் தொடர்­பு­கொள்ள முடி­ய­வில்லை. தாம் ஏமாற்­றப்­பட்­ட­தைப் புரிந்­து­கொண்டு காவல்­து­றை­யில் இளை­யர் புகார் அளித்­துள்­ளார்.