செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f4f2317c-6f9b-4ddd-ad2f-e6a6bccaecfc
-

கோவில்களில் சமய நூலகங்கள்

சென்னை: சென்னையில் பக்தர்கள் அதிகமாக வரும் கோவில் களில் புதிய சமய நூலகங்கள் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள் ளார். ஏற்கெனவே கோவில்களுக்குச் சொந்தமாக உள்ள 114 சமய நூலகங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாக செய்தியாளர் களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார். மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான ரூ.1,500 கோடி மதிப்பி லான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: ஆறு பேர் கைது

புதுவை: கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி, ரூ.1.65 கோடி வசூலித்து மோசடி செய்த பெண் உட்பட ஆறு பேர் புதுவை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 179 பேரிடம் இந்தக் கும்பல் பணம் வசூலித்துள்ளது. முதல் தவணையாக ஒரு லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் என்றும் வேலை கிடைத்ததும் மீதத்தொகையைத் தர வேண்டும் என்றும் இந்தக் கும்பல் கூறியதை நம்பிய பலர் பணம் கொடுத்துள்ளனர். 35 வங்கிக்கணக்குகள் மூலம் இந்தத்தொகையை வசூலித்த இந்தக் கும்பல் சொன்னபடி வேலை வாங்கித் தராததால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

'கூகல் பே' மூலம் லஞ்சம் வசூலித்த இரு காவலர்கள் பணி இடமாற்றம்

கோவை: கோவையில் உள்ள சோதனைச்சாவடி ஒன்றில் வாகனமோட்டிகளிடம் லஞ்சம் பெற்ற இரண்டு காவலர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். லஞ்சம் கொடுக்க கையில் பணம் இல்லை என்று கூறிய வாகனமோட்டிகளிடம் தங்களுடைய 'கூகல் பே' கணக்கு விவரத்தைக் கொடுத்து அதன் மூலம் பணத்தைச் செலுத்துமாறு இரு காவலர்களும் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்: பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு

சென்னை: எதிர்வரும் புத்தாண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார். மேலும், நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஐந்து நாள்கள் மழை நீடிக்கும்

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகக் கடலோர மாவட்டங்க ளில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் அந்நிலையம் கூறியுள்ளது.