தென் மாவட்டங்களில் காவல்துறையினர் குவிப்பு

தென் மாவட்டங்களில் காவல்துறையினர் குவிப்பு

3 mins read
ec44e0cc-1b94-44df-9e34-5b9c79c78921
சென்னையில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தீட்டப்படும் சுவரோவியத்தில் தமிழக வெள்ளப் பெருக்கு, நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து, கொரோனா தொற்று ஆகியவற்றைச் சித்திரிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.படம்: இபிஏ -

புத்தாண்டு: நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பாதுகாப்புப் பணியில் 5,000 போலிசார்

சென்னை: ஆங்­கி­லப் புத்­தாண்­டுப் பிறப்­பை­யொட்டி தென் மாவட்­டங்­களில் ஐந்­தா­யி­ரம் காவ­லர்­களும் சென்­னை­யில் பத்­தா­யி­ரம் பேரும் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட உள்­ள­னர்.

சென்­னை­யைப் போலவே பிற மாவட்­டங்­க­ளி­லும் புத்­தாண்­டுக் கொண்­டாட்­டங்­க­ளுக்கு கடும் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

நெல்லை மாவட்­டத்­தில் 1,500 காவ­லர்­களும் அதி­கா­ரி­களும் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­பட உள்­ள­தாக அம்­மா­வட்ட காவல் கண்­கா­ணிப்­பா­ளர் பிர­வீன்­கு­மார் அபி­னவ் தெரி­வித்­துள்­ளார்.

அதே போல் தூத்­துக்­கு­டி­யில் 1,500, தென்­கா­சி­யில் 500 காவ­லர்­கள் பாது­காப்பு, கண்­கா­ணிப்­புப் பணி­யில் ஈடு­பட உள்­ள­னர்.

நெல்லை மாந­க­ரப் பகு­தி­களில் புத்­தாண்­டுக் கொண்­டாட்­டத்­துக்­காக பொது இடங்­களில் கூடு­வ­தற்கு அனு­மதி இல்லை என காவல் ஆணை­யர் செந்­தா­ம­ரைக் கண்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

மூன்று மாவட்­டங்­க­ளி­லும் இன்று காலை முதல் நாளை காலை ஆறு மணி வரை பல்­வேறு பகு­தி­களில் விடிய விடிய வாக­னச்­சோ­தனை நடத்­தப்­பட உள்­ளது.

மது அருந்­தி­விட்டு வாக­னங்­களை இயக்­கு­ப­வர்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும், இரு­சக்­கர, நான்கு சக்­கர வாக­னங்­களில் அதி­க­மா­னோர் செல்­லக்­கூ­டாது என்­றும், வாக­னங்­களை அதி­வே­க­மாக இயக்­கக் கூடாது என்­றும் காவல்­துறை கூறி­யுள்­ளது.

மேலும், புத்­தாண்­டுக் கொண்­டாட்­டம் என்ற பெய­ரில் பொது இடங்­களில் கூச்­ச­லி­டு­வது, பொது அமை­திக்குப் பங்­கம் ஏற்­ப­டுத்­து­வது ஆகிய செயல்­களில் ஈடு­ப­டு­ப­வர்­கள் மீது கடும் நட­வ­டிக்கை பாயும் என எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மூன்று மாவட்­டங்­க­ளி­லும் உள்ள அரு­வி­களில் குளிப்­ப­தற்­கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

மதுரை, திருச்சி உள்­ளிட்ட பிற மாவட்­டங்­க­ளி­லும் கட்­டுப்­பா­டு­கள் அறி­விக்கப்பட்டுள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

சென்­னை­யில் பத்­தா­யி­ரம் காவ­லர்­கள் பாது­காப்பு, கண்­கா­ணிப்­புப் பணி­யில் ஈடு­ப­டு­வர் என காவல் ஆணை­யர் சங்­கர் ஜிவால் தெரி­வித்­துள்­ளார். மேலும், இன்று நள்­ளி­ரவு 12 மணிக்­குப் பிறகு சென்­னை­யில் பொது­மக்­கள் வெளி­யில் நட­மா­டத் தடை விதிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் வாக­னப் போக்­கு­வ­ரத்து கட்­டுப்­படுத்­தப்­படும் என்­றும் அவர் கூறியுள்ளார். தற்­போ­தைய சூழலை கருத்­தில் கொண்டு அத்­தி­யா­வ­சிய போக்­கு­வ­ரத்­துக்கு மட்­டுமே அனு­மதி அளிக்­கப்­படும் என்­றும் ஜன­வரி 1ஆம் தேதி காலை 5 மணி வரை வாக­னப் போக்­கு­வ­ரத்­துக் கட்­டுப்­பாடு இருக்­கும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

அன்றாட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 25,000ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, சென்னையில் அன்றாடம் நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 25 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தற்போது பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 134 மருத்துவமனைகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் ஓமிக்ரான் பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் இதுவரை 45 பேர் ஓமிக்ரான் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர் என்றும் அவர்களில் 17 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொது மக்கள் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.