பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது மாணவிகள் புகார்

1 mins read
f41b6776-356c-4cbf-bfff-8974df2c0e33
-

தென்­காசி: மாண­வி­க­ளுக்குப் பாலி­யல் தொல்லை கொடுத்­த­தாக பள்ளி ஆசி­ரி­யர் மீது காவல்­துறை­யில் புகார் அளிக்­கப்­பட்­ட­தால் சுரண்­டைப் பகு­தி­யில் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

தென்­காசி மாவட்­டம் சுரண்டை அருகே உள்ள திசை­யன்­வி­ளை­யில் அரசு உதவி பெறும் தனி­யார் மேல்­நி­லைப்­பள்ளி இயங்கி வரு­கிறது. இங்கு எட்­டாம் வகுப்­புக்குப் பாடம் நடத்­தும் ஆசி­ரி­யர் ஒரு­வர் மாண­வி­களை அடிக்­கடி அருகே அழைத்து இனிப்பு கொடுத்து பேசு­வார் என்­றும் அப்­போது மாண­வி­க­ளின் உட­லைத் தொட்டு அத்­து­மீ­று­வார் என்­றும் புகார் எழுந்­துள்­ளது.

இது குறித்து சில மாண­வி­கள் மற்ற ஆசி­ரி­யர்­க­ளி­ட­மும் பெற்­றோ­ரி­ட­மும் விவ­ரம் தெரி­வித்­துள்­ள­னர். இத­னால் கொதிப்­ப­டைந்த மாண­வி­க­ளின் பெற்­றோர் நேர­டி­யா­கப் பள்­ளிக்கு வந்து தலைமை ஆசி­ரி­ய­ரி­ட­மும் பள்ளி தாளா­ள­ரி­ட­மும் இது குறித்து முறை­யிட்­ட­னர்.

இதை­ய­டுத்து விசா­ர­ணைக்­குழு அமைக்­கப்­பட்­டது. அதில் ஆசி­ரி­யர்­கள் சிலர் இடம்­பெற்­ற­னர்.

புகா­ருக்கு ஆளான ஆசி­ரி­ய­ரி­ட­மும் பாதிக்­கப்­பட்ட மாண­வி­க­ளி­ட­மும் நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யின் மூலம் ஆசி­ரி­யர் பாலி­யல் தொல்லை கொடுத்­தது உறு­தி­யா­னது.

இது குறித்து விசா­ர­ணைக்­குழு எழுத்­துபூர்­வ­மாக அளித்த அறிக்­கையை அடுத்து, உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என பள்ளி நிர்­வா­கம் அறி­வித்­துள்­ளது.

அவர் பணி இடை­நீக்­கம் செய்­யப்­ப­டு­வார் என்று கூறப்­படும் நிலை­யில், காவல்­து­றை­யி­லும் புகார் அளிக்­கப்­பட்­டதை அடுத்து, அவர் தேடப்­பட்டு வரு­கி­றார்.