துப்பாக்கி சுடும் பயிற்சி: சிறுவன் மீது பாய்ந்த குண்டு

1 mins read
6394285c-fe92-44a6-9e28-9709596b4f99
-

புதுக்­கோட்டை: மத்­திய தொழில் பாது­காப்­புப் படை­யி­ன­ரின் (சிஐ­எஸ்­எஃப்) துப்­பாக்­கி சுடும் பயிற்­சி­யின்­போது அங்கு தவ­றுத­லா­கச் சென்ற ஒரு சிறு­வ­னுக்கு தலை­யில் குண்டு பாய்ந்­தது.தற்­போது அவ­னுக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

புதுக்­கோட்டை மாவட்­டம் நார்த்­தா­மலை பகு­தி­யைச் சேர்ந்த 11 வய­துச் சிறு­வன் புக­ழேந்தி, தன் தாத்தா வீட்­டில் தங்கி படித்து வரு­கி­றான்.

நேற்று காலை அங்­குள்ள மலை­கள் சூழ்ந்த பயிற்சி மையத்­தில் பாது­காப்­புப் படை­யி­னர் துப்­பாக்­கி சுடும் பயிற்­சி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அப்­போது சிறு­வன் புக­ழேந்தி அங்கு சென்­ற­தா­க­வும் அவ­னது தலை­யில் குண்டு பாய்ந்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து, புக­ழேந்தி புதுக்­கோட்டை அரசு மருத்­துவ­மனை­யில் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­டான்.

பாது­காப்­புப் படை­யி­ன­ரின் அலட்­சி­யம் கார­ண­மாக சிறு­வன் தலை­யில் குண்டு பாய்ந்­த­தாக பொது­மக்­கள் குற்­றம்­சாட்டி உள்­ள­னர். இதை­ய­டுத்து, அவர்­கள் சாலை மறி­ய­லில் ஈடு­பட்­ட­தால் புதுக்­கோட்டை, திருச்சி இடையே போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டது.

காவல்­துறை தரப்­பிலோ, பாது­காப்­புப் படை­யி­னர் பயிற்சி­யில் ஈடு­ப­டு­வது வழக்­க­மான நடவடிக்கை என்­றும் பயிற்சி மையம் உள்ள பகு­தி­யில் சிவப்பு கொடி ஏற்றி வைக்­கப்­ப­டு­வ­தன் மூலம் அங்கு செல்­லக்கூடாது என்­பது அப்­ப­குதி மக்­க­ளுக்கு நன்கு தெரி­யும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.