தஞ்சையில் குறுவை சாகுபடி அதிகரிப்பு: 48 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ள சாதனை

தஞ்சையில் குறுவை சாகுபடி அதிகரிப்பு: 48 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ள சாதனை

1 mins read
c53079e1-d386-432b-9b23-2f07ffe8e076
தஞ்சையில் நடைபெற்ற அரசு விழாவின்போது அங்கிருந்த பொதுமக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.படம்: ஊடகம் -

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி அதிகரித்துள்ளது என்றும் 48 ஆண்டுகளுக்குப் பிறகு இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமி­ழ­கத்தை முன்­னே­றிய மாநி­ல­மாக மாற்றிக் காட்­டு­வதே தமது லட்சி­யம் என்­றும் தமி­ழக அரசு இதை இலக்­கா­கக் கொண்டு செயல்­பட்டு வரு­கிறது என்­றும் தஞ்­சை­யில் நடை­பெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா­வில் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

"தஞ்சை மாவட்­டத்­தில் வழக்­க­மாக குறுவை சாகு­படி 1 லட்­சத்து 6 ஆயி­ரத்து 250 ஏக்­கர் என்ற அள­விலே இருந்­தது. ஆனால் தற்­போது இலக்கைத் தாண்டி 1 லட்­சத்து 66 ஆயி­ரத்து 135 ஏக்­க­ரில் குறுவை சாகு­படி செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த மாபெ­ரும் சாத­னைக்கு அரசு எடுத்த பல்­வேறு நட­வ­டிக்­கை­களும் கார­ண­மா­கும்," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

இந்த விழா­வில் 43 ஆயி­ரம் பேருக்கு முதல்­வர் நலத்­திட்ட உத­வி­களை வழங்­கி­னார். இதற்­காக 237 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் தெரி­வித்­தார். இந்த விழா­வில் மொத்­தம் ரூ.1,229 கோடியே 83 லட்­சம் மதிப்­பில் புதிய திட்­டப்­பணி­க­ளுக்கு அடிக்­கல் நாட்­டினார்.