தமிழகத்தில் ஒரு மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கையும் ஒன்பது மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த இரு நாட்களாக சென்னையில் கனமழை பெய்ததால், குடியிருப்புப் பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. படம்: இபிஏ

