ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கதிரேப்பள்ளியில் போலி மதுபான ஆலை நடத்தியதாக மூவரை காவல்துறை கைது செய்தது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து பொட்டலத்தில் மதுவை வாங்கி வந்து அதைக் கண்ணாடி போத்தல்களில் அடைத்து, தமிழக டாஸ்மாக் மது போத்தல்கள் போன்று ஒட்டுத்தாள்கள், வில்லை கள் ஒட்டி மூடி பொருத்தி விற்று வந்த கும்பல் சிக்கியது.
ஒரு வாகனத்தைச் சோதனை யிட்ட அதிகாரிகள் அதில் 30 போலி மது போத்தல்களைக் கைப்பற்றி தமிழகத்தைச் சேர்ந்த மூவரைப் பிடித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அதிகாரிகள் போலி மது ஆலை ஒன்றைக் கண்டனர். அந்த இடத்தில் 700 மது போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.
அவற்றை விற்பனைக்குக் கொண்டுசெல்ல பயன்படுத்திய கார், குட்டி லாரி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.