கொட்டகையில் வசிக்கும் ஐபிஎஸ் அதிகாரியின் பெற்றோர்

கொட்டகையில் வசிக்கும் ஐபிஎஸ் அதிகாரியின் பெற்றோர்

1 mins read
c073c656-4b36-465b-a3f0-3ba00b8b2695
-

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வில் காவல்­துறை உய­ர­தி­காரி ஒரு­வ­ரின் குடும்­பத்­தார் கிரா­மத்­தில் உள்ள தக­ரக் கொட்­ட­கை­யில் வசித்து வரும் தக­வல் பல­ரை­யும் ஆச்­ச­ரி­யப்­பட வைத்­துள்­ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஐபி­எஸ் அதி­கா­ரி­யாக தேர்ச்சி பெற்ற ஜெக­தீஷ் அட­ஹள்ளி இப்­போது விஜ­ய­வாடா மாவட்ட காவல்­துறை உய­ர­தி­யாக பொறுப்­பில் உள்­ளார்.

இவ­ரது சகோ­த­ரர் மத்­திய அர­சுப் பணி­யி­லும் இரு சகோ­த­ரி­கள் ஆசி­ரி­யை­க­ளா­க­வும் உள்­ள­னர்.

இவர், பெல­காவி மாவட்­டத்தில் உள்ள காக்­வாட் என்ற குக்­கிராமத்தைச் சேர்ந்­த­வர். அங்­குள்ள கூட்டு­றவு சங்க ஆலை­யில் ஓட்­டு­நரா­கப் பணி­யாற்­று­கி­றார் ஜெக­தீ­ஷின் தந்தை ஸ்ரீகாந்த்.

63 வய­தான அவர், தன் மனைவி சாவித்திரி (53 வயது) உடன் இன்­ற­ள­வும் நான்கு பிள்­ளை­க­ளை­யும் வளர்த்து ஆளாக்­கிய அதே தகரக் கொட்­ட­கை­யில்­தான் வசிக்­கி­றார்.

தமது நான்கு பிள்­ளை­க­ளை­யும் நன்கு படிக்க வைத்து பெரிய பதவி­களில் அமர வைக்க வேண்­டும் என்­ப­து­தான் ஸ்ரீகாந்­தின் கன­வாக இருந்­துள்­ளது. இதற்­காக கடன் வாங்கிப் படிக்க வைத்­த­தா­கச் சொல்­கி­றார்.

நான்கு பிள்­ளை­களில் ஜெக­தீஷ் படிப்­பில் படு­சுட்டி என்­றும் அவர் பட்­ட­யக் கணக்­கா­ள­ராக வேண்­டும் என்­பதே தமது விருப்­ப­மாக இருந்­தது என்­றும் சொல்­கி­றார் ஸ்ரீகாந்த்.

2013ஆம் ஆண்டு தேர்­தல் ஆணைய அதி­காரி ஒரு­வ­ருக்­காக வாக­னம் ஓட்­டி­ய­போ­து­தான் ஐஏ­எஸ் தேர்வு குறித்து தெரி­ய­வந்­த­தாம். இதை மக­னி­டம் அவர் கூற, தந்தை­யின் விருப்­பத்தை ஏற்று நன்கு படித்­துள்­ளார் ஜெக­தீஷ்.

"என் மகன் பெரிய அதி­காரி என்பதற்­காக ஆடம்­பர வாழ்க்கைக்கு மாற விருப்பம் இல்லை," என்­கி­றார் ஸ்ரீகாந்த்.