குறித்த நேரத்தில் விமானங்களை இயக்குவதில் சென்னை விமான நிலையத்திற்கு 8வது இடம்

குறித்த நேரத்தில் விமானங்களை இயக்குவதில், அனைத்துலக அளவில் சென்னை விமான நிலையம் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

விமானப் போக்குவரத்து, விமான நிலையங்களின் செயல்பாடு  குறித்து லண்டனில் உள்ள ‘சிரியம்’ நிறுவனம் ஆண்டுதோறும் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. விமானச் சேவை குறித்த தரவை அது வெளியிட்டு வருகிறது.

அதன்படி, கடந்த ஆண்டு விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களின் செயல்பாடுகள், விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்பாடு, வருகை பற்றி விரிவான ஆய்வை நடத்திய அந்த நிறுவனம், அதன் அறிக்கையை அண்மையில் வெளியிட்டது.

அதில், 2021ஆம் ஆண்டில் அனைத்துலக விமான நிலையங்களில் இருந்து குறித்த நேரத்தில் விமானங்கள் புறப்பட்டதில் சென்னை விமான நிலையம் 89.32 விழுக்காடுடன் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

‘சிரியம்’ நிறுவனத்தைப் பொறுத்தமட்டில், பட்டியலில் முதல் 10 இடங்களில் வந்த ஒரே இந்திய விமான நிலையம் அது.

அமெரிக்காவின் மயாமி விமான நிலையம், ஜப்பானின் ஃபுக்குவோக்கா விமான நிலையம் மற்றும் ஹனிடா விமான நிலையம் முதல் மூன்று இடங்களில் வந்தன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!