திருச்சி விமான நிலையத்திற்கு ஜனவரி 9 முதல் சரக்குகளைக் கொண்டுவர வேண்டாம்

திருச்சி விமான நிலையத்திற்கு ஜனவரி 9 முதல் சரக்குகளைக் கொண்டுவர வேண்டாம்

1 mins read
a92c6c4e-908d-4c20-aa0f-a4ccdae4e556
திருச்சி விமான நிலைய இயக்குநர் எஸ்.தர்மராஜ் வெளியிட்ட சுற்றறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. -

திருச்சி விமான நிலையத்தில் சரக்கு முனையம், நிர்வாக காரணங்களுக்காக ஜனவரி 9ஆம் தேதிமுதல் தற்காலிகமாக மூடப்படுவதால், விமான நிலையத்திற்கு சரக்குகளைக் கொண்டுவர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பொருட்டு, அனைத்து விமான நிறுவனங்களும் பயண முகவர்களும் திருச்சி விமான நிலைய சரக்கு முனையம் மூலம் ஏற்றுமதி செய்வதற்காக சரக்குகளை ஏற்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சரக்குகளைக் கையாள்வது குறித்த மறு அறிவிப்பு பின்னர் ஒரு தேதியில் வெளியிடப்படும் என்று திருச்சி விமான நிலைய இயக்குநர் எஸ்.தர்மராஜ் வெள்ளிக்கிழமை (ஜனவரி 7) வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறினார்.