வேலூர்: வெளி மாநிலத்தவர்கள் வெளியே நடமாட தடை

வேலூர்: வெளி மாநிலத்தவர்கள் வெளியே நடமாட தடை

1 mins read
7e1e7053-cd0d-42bc-83a2-2a8512fc5201
வேலூர் பாபுராவ் தெருவில் தடுப்புகள் அமைக்கும் மாநகராட்சி ஊழியர்கள். படம்: ஊடகம் -

வேலூர்: வேலூ­ரில் தங்­கு­வி­டு­தி­களில் உள்ள நூற்­றுக்­க­ணக்­கான வெளி­மா­நி­லத் தொழி­லா­ளர்­க­ளுக்கு கொரோனா பரி­சோ­தனை நடத்­தப்­பட உள்­ளது.

அது­வரை அவர்­கள் வெளியில் நட­மாட தடை விதிக்­கப்­பட்­டுள்­ளதாக வேலூர் மாந­க­ராட்சி அறி­வித்­துள்­ளது.

வேலூ­ரில் மாந­க­ராட்­சிக்கு உட்­பட்ட பகு­தி­களில் தொற்று பாதிப்பு அதி­க­ரித்து வரு­கிறது. இதை­யடுத்து, அங்கு பல்­வேறு கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

வெளி­மா­நி­லத் தொழி­லா­ளர்­கள் மூலம் தொற்று பர­வு­வது தெரிய வந்­துள்­ள­தால் அவர்­கள் அதி­கம் வசிக்­கும் காந்தி சாலை உள்­ளிட்ட எட்டு இடங்­களில் மாந­க­ராட்சி ஊழி­யர்­கள் கண்­கா­ணிப்­புப் பணியை மேற்­கொண்­டுள்­ள­னர்.

தங்­குவிடு­தி­களில் தங்­கி­யுள்ள வெளி மாநி­லத்­த­வர்­கள் வெளி­யில் வர முடி­யா­த­படி ஆங்­காங்கே தடுப்­பு­கள் அமைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

பொது­மக்­க­ள் அவ்வழியே செல்ல அனு­மதி இல்லை.