தன்னைக் கடித்த பாம்புடன் சிகிச்சை பெற வந்த ஆடவர்

தன்னைக் கடித்த பாம்புடன் சிகிச்சை பெற வந்த ஆடவர்

1 mins read
314ae349-e429-4139-a2c1-ee8f9e4788a7
-

நாமக்­கல்: ராசி­பு­ரம் மருத்­துவ மனைக்கு தன்­னைக் கடித்த விஷப்­பாம்­பு­டன் (படம்) சிகிச்­சைக்கு வந்த ராஜா என்ற ஆட­வ­ரைக் கண்டு மருத்­து­வ­ம­னை­யில் இருந்­த­வர்­கள் பயந்து ஓடி­னர்.

நாமக்­கல் மாவட்­டம், ராசி­புரத்தை அடுத்த மல்­லூர் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் ராஜா, விவ­சாயி.

இவர், தனது நிலத்­தில் வேலை பார்த்துக்கொண்­டி­ருந்­த­போது, கட்டு­வி­ரி­யன் பாம்பு ஒன்று அவ­ரைக் கடித்­துள்­ளது.

உடனே சுதா­ரித்­துக்­கொண்ட ராஜா, நான்கு அடி நீள பாம்பை உயி­ரு­டன் லாவ­க­மா­கப் பிடித்து, அதை ஒரு பிளாஸ்­டிக் டப்­பா­வில் போட்டு அடைத்து எடுத்துக்கொண்டு ராசி­புரம் அரசு மருத்­து­வ­மனைக்கு சிகிச்சை பெறவந்­தார்.

மருத்­து­வர்­கள் ராஜாவை மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­தித்து தகுந்த சிகிச்சை அளித்­த­னர்.