300 கிலோ கஞ்சா பறிமுதல்: எழுவர் கைது

300 கிலோ கஞ்சா பறிமுதல்: எழுவர் கைது

2 mins read
3fe4e5bf-0369-4fb5-9e8d-57278186faeb
நாமக்கல், குமாரபாளையம் பகுதியில் கடத்தப்பட்ட கஞ்சா பொட்டலங் களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார்களையும் மாவட்ட உயர் காவல்துறை அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் பார்வையிட்டார்.படம்: ஊடகம் -

நாமக்கல்: ஆந்திர மாநிலம், விசா கப்பட்டினத்தில் இருந்து நாமக்கல், குமாரபாளையம் வழியாக தேனி, கோவை மாவட்டத்திற்கு காரில் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற ஏழு பேர் கொண்ட கும்பலை நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்தக் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று கார்களை யும் ரூ.1 கோடி மதிப்பிலான 300 கிலோ கஞ்சாவையும் காவல்துறை யினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் ஒன்று:

நாமக்கல் அருகே உள்ள முதலைப்பட்டியில் நாமக்கல் காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, நாமக்கல் நோக்கிச் சென்ற காரை அவர்கள் தடுத்து நிறுத்தினர்.

எனினும், காரை நிறுத்தாமல் சென்றதால் சந்தேகமடைந்த காவல் துறையினர் விரட்டிச் சென்று காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் 200 பொட்டலங்களில் இருந்த 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

காரில் இருந்த மூவரும் தேனி யைச் சேர்ந்த முருகன், ஜெய சந்திரன், மகேஷ் என்பது தெரிய வந்தது. ஆந்திர மாநிலம், விசாகப் பட்டினத்தில் இருந்து தேனியில் விற்பதற்காக கஞ்சாவை வாங்கி வந்ததாகக் கூறிய அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சம்பவம் இரண்டு:

இதேபோல், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், ஆந்திராவில் இருந்து கோவை நோக்கிச் சென்ற இரு கார்களைச் சோதனையிட்ட போது, அதில் 100 கிலோ கஞ்சா கடத்திச்சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக கோவையைச் சேர்ந்த முருகன், அப்துல் ஜலீல், முஜிதீப் ரகுமான், சுல்தான் ஆகிய நால்வரைக் கைது செய்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் நாமக்கல் மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் கூறுகையில், "கஞ்சா கடத்திய ஏழு பேரை கைது செய்து, ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு உள்ளது. தீவிர விசாரணை தொடர்கிறது," என்றார்.