திருநெல்வேலி: பொங்கல் திருநாள் சமயத்தில் புதுமணத் தம்பதியருக்கு பெற்றோர் வீடுகளில் இருந்து சீர்வரிசைகள் வழங்கும் பாரம்பரியம் தொடர்ந்து வருகிறது.
இந்த சீர்வரிசை பொருள்களை பெரிய அளவிலான மண்பானைகளில் வைத்து வழங்குகின்றனர். இதற்காகப் பிரத்யேகமாக சீர்வரிசை பானைகள் தயார் செய்யப்படுகின்றன.
இந்தப் பானைகளில் தெய்வ உருவங்கள், தலைவர்களின் புகைப்படங்கள், இயற்கை காட்சிகள், திருவள்ளு வர் போன்ற தமிழ் புலவர்களின் படங்களை வரைந்து விற்பனை செய்யும் வழக்கம் தொடர்ந்து வருகிறது.
இந்த பொங்கல் பண்டிகையின் போதும் வண்ண ஓவியங்களுடன் சீர்வரிசை பானைகள் பாளையங்கோட்டை, திருநெல்வேலி பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
பெரிய அளவிலான ஒரு சீர்வரிசை பானை ரூ.1,200க்கும் சிறிய அளவிலான பானைகள் ரூ.200 முதல் ரூ.400 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
பொங்கல் திருநாளுக்கு சென்னை கோயம்பேடு சந்தையில் கரும்பு, மஞ்சள், இஞ்சிக்கொத்து உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை என்று கோயம்பேடு சிறு, மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ். எஸ். முத்துக்குமார் கூறினார்.

