கைதிகள் பயிரிட்ட கரும்புகள் அமோக விற்பனை

கைதிகள் பயிரிட்ட கரும்புகள் அமோக விற்பனை

1 mins read
9069fb74-b469-4617-9cb1-d21a966a94e8
கைதிகளால் பயிர் செய்யப்பட்ட கரும்புகள், திருச்சி மாநகரம் எங்கும் விற்பனை ஆகின.படம்: தமிழக ஊடகம் -

திருச்சி: தங்­க­ளது உழைப்­பில் அறு­வடையான கரும்பு மக­சூல், நல்ல லாபம் பார்த்து வரு­வ­தால் கைதி­கள் பல­ரும் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.

திருச்சி மத்­திய சிறை­யில் அடை­பட்­டுள்ள நன்­ன­டத்­தைக் கைதி­க­ளைக் கொண்டு, சிறைத் தோட்­டத்­தில் கரும்பு, காய்­கறி, பழங்­கள், வெங்­கா­யம் உள்­ளிட்டவை பயி­ரி­டப்­ப­டு கின்றன.

ஒவ்­வொரு ஆண்­டும் 5 ஏக்­கர் நிலத்­தில் கைதி­க­ளைக் கொண்டு பயி­ரி­டப்­படும் இந்தக் கரும்புப் பயிர், கொரோனா தாக்­கம் கார­ண­மாக இவ்­வாண்டு 2 ஏக்­க­ரில் மட்­டுமே பயி­ரி­டப்­பட்டு, திருச்சி மாந­க­ரிலும் மத்­திய சிறை­யின் அங்­கா­டி­யி­லும் விற்­பனை செய்­யப்பட்டது.

எந்த ஒரு பூச்­சிக்­கொல்லி மருந்­தையும் பயன்­ப­டுத்­தா­மல் முற்­றி­லும் இயற்கையான முறை­யில் பயிரிடப்­பட்ட கரும்­பு­கள் குறைந்த விலைக்கு விற்­கப்­ப­டு­வ­தால் அவற்றை பொது­மக்­கள் பலரும் ஆர்­வமாக வாங்­கிச் சென்­ற­னர். இதில் கிடைக்­கும் வரு­மா­னம் சிறைக் ­கை­தி­க­ளுக்கு ஊதி­ய­மாக வழங்­கப்­படும்.